»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனோரமா, மணிரத்னம் உட்பட 66 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஆண்டு தோறும் கலை, பொருளாதாரம், விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்குவோரை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மிக உயரிய விருதான பத்மவிபூஷன் ஆந்திர கவர்னர்ரங்கராஜன், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சோலிசோராப்ஜி, தபேலா இசைக் கலைஞர் பண்டிட் கிஷன்மகராஜ் உள்பட 5 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

பத்மபூஷண் விருது 27 பேருக்கு வழங்கப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் என். ரங்கபாஷ்யம், பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ், தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் ஆகியோர் இந்த பத்மபூஷன் விருதைப் பெறுகிறார்கள்.

நடிகை மனோரமா, டைரக்டர் மணிரத்னம் உட்பட 66 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் டெல்லியில் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருதுகளைவழங்குவார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil