»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

50வது தேசிய திரைப்பட விருதுகளை மணி ரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படமும், சஞ்சய்லீலா பன்சாலி இயக்கிய தேவதாஸ் இந்திப் படமும் அள்ளிச் சென்றுள்ளன.

பேபி கீர்த்தனா, வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் சந்திரசேகர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் தேசிய விருதுகள் பெறதேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ்சினிமாவுக்கு மொத்தம் 8 விருதுகள் கிடைத்துள்ளன.

50-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் அதிகம்எதிர்பார்க்கப்பட்ட தேவதாஸ் திரைப்படம் 5 விருதுகளைப் பெற்றது. ஆனால் தமிழ்ப் படமானகன்னத்தில் முத்தமிட்டால் படம் 6 விருதுகளைத் தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளது.

அதிக விருதுகளைப் பெற்ற தனிப்பட்ட படமாக கன்னத்தில் முத்தமிட்டால் திகழ்கிறது.

சிறந்த நடிகராக அஜய் தேவகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகத்சிங் படத்தில் நடித்ததற்காகஇந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

பிரபல நடிகை அபர்னா சென்னின் மகள் கொங்கனா சென்னிற்கு சிறந்த நடிகை விருதுகிடைத்துள்ளது. மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் என்ற படத்தில் நடித்ததற்காக சென் சிறந்த நடிகைவிருது பெற்றார்.

நடிகர் சந்திரசேகருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. விரைவில்வெளியாகவுள்ள நண்பா, நண்பா என்ற தமிழ் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதைசந்திரசேகர் வென்றுள்ளார்.

தேசிய அளவில் சந்திரசேகருக்கு விருது கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

சிறந்த துணை நடிகைக்கான விருது இந்தியைச் சேர்ந்த ராக்கிக்கு கிடைத்துள்ளது.

பல்வேறு படங்களில் பலவித கேரக்டர்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜுக்குநடுவர்களின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான்:

தமிழில் சிறந்த படமாக கன்னத்தில் முத்தமிட்டால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகிடைத்துள்ளது. 3-வது முறையாக அவர் தேசிய விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத்தில் 3 முறை தேசிய விருது பெற்ற ஒரே இசையமைப்பாளரும் ரகுமான் தான்.

கவிப்பேரரசு வைரமுத்து:

அடுத்த சாதனையாளர் கவிப்பேரரசு வைரமுத்து. 5-வது முறையாக தேசிய விருது இவரைத் தேடிவந்துள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவர் எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே என்றபாடலுக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் 2 முறையும், ரஹ்மான் இசையில் 3 முறையும் தேசியவிருது பெற்று சாதனை படைத்துள்ளார் வைரமுத்து. இந்தியாவிலேயே அதிக முறை தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதே படத்தில் பணியாற்றிய லட்சுமி நாராயணனுக்கு சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருதும், ஸ்ரீகர்பிரசாத்துக்கு சிறந்த எட்டிங்குக்கான விருதும் கிடைத்துள்ளன.

பார்த்திபனின் மகளான குட்டி நடிகை கீர்த்தனா, சிறந்த குழந்தை நட்சத்திரமாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் ஆணிவேர் போன்ற ரோலில் நடித்து, கலக்கியிருந்தார்கீர்த்தனா. அனுபவம் மிக்க நடிகைகளையே தோற்கடிக்கும் வகையிலான அவரது நடிப்பு படத்தின்கனத்திற்கு மேலும் கனமூட்டியது.

இதுதவிர மேஜிக் மேஜிக் என்ற தமிழ் 3டி படத்திற்கு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் விருது கிடைத்துள்ளது.இந்தியா ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டது.

சமீப காலமாகவே தமிழ் சினிமாக்கள் தேசிய அளவில் முத்திரை பதிக்கத் தவறுவதில்லை. இந்தமுறையும் அது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு 8 விருதுகளை தமிழ் அள்ளியுள்ளது.

விருது பெற்ற பிற படங்கள்:

மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர்:

சிறந்த இயக்குனர் அபர்னா சென், சிறந்த திரைக்கதை, தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத்விருது.

மோண்டோ மெயர் உபாக்யான்: சிறந்த பொழுதுபோக்குப் படம் (வங்காளம்).

தேவ்தாஸ்: கலை, இயக்கம், நடனம், பின்னணிப் பாடகி, ஆடை வடிவமைப்பு.

உதித் நிாராயணன்: சிறந்த பின்னணிப் பாடகர்.

அபிக் கபாத்யாயா: சிறந்த ஒளிப்பதிவாளர்.

இந்திரா காந்தி விருது: பதல் கர், பிரஹோர் (இரண்டுமே வங்காளப் படங்கள்).

விருது பெற்ற பிராந்திய மொழிப் படங்கள்:

நிழல் கூத்து (மலையாளம்), சிங்காரவ்வா (கன்னடம்), கோனிகர் ராம்தேனு சுபோ கூரத்(வங்காளம்), வாஸ்துபுருஷ் (மராத்தி), ஸ்டம்பிள் (ஆங்கிலம்).

தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா ஆகிய மொழிப் படங்களில் ஒன்று கூட இந்த ஆண்டு விருதுபெறத் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகளை அறிவித்த விருதுக் குழுத் தலைவர் பிரகாஷ் ஜா கூறுகையில்,

மொத்தம் 138 படங்கள் விருதுகளுக்காக போட்டியிட்டன. இவற்றின் தரங்கள் முன்பை விடகூடியிருந்தன. இருப்பினும், பிராந்திய மொழிப் படங்களில் வீழ்ச்சி நிலை உள்ளது.

முன்பு போல பிராந்திய மொழிப் படங்களில் போட்டி அதிகம் இல்லை. பிராந்திய மொழிப்படங்களில் தமிழ் மட்டுமே அதிக போட்டியைக் கொடுத்தது. அதில் தான் நிறைய நல்ல படங்கள்வந்தன என்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil