»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க பிரசாந்த்-ஸ்னேகா நடித்த"விரும்புகிறேன்" படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஸ்னேகாவுக்கு இதுதான் முதல் தமிழ் படமாகும். நீண்ட காலமாக வெளியாகமல் இருந்து சமீபத்தில்வெளியாகி நன்றாக ஓடிய படம் "விரும்புகிறேன்".

சிறந்த திரைக்கதை என்று பத்திரிக்கைகளாலும், ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் இந்தப் படம்பாராட்டப்பட்டது.

தீயணைக்கும் பணிக்காக ஒரு கிராமத்திற்கு வரும் தீயணைப்பு வீரரான பிரசாந்த், கிராமத்துப்பெண்ணான ஸ்னேகா மீது காதல் கொள்கிறார். அவர்களது காதலுக்குக் குறுக்கே ஜாதிப் பிரச்சினைதடையாக இருக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீளுகிறார்கள் என்பதே படத்தின் கதையாகும்.

மேலும் கிராமங்களில் ஒற்றுமை தேவை என்ற கருத்தையும் இந்தப் படம் வலியுறுத்துகிறது.

இந்நிலையில் மலேசியாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக இந்தியாவின் சார்பில்"விரும்புகிறேன்" தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழி படங்களையும் பார்த்து ஆய்வுசெய்த இதற்கான விசேஷ கமிட்டி, "விரும்புகிறேன்" படத்தை மட்டுமே தேர்வு செய்தது.

நாளை (பிப்ரவரி 16) தொடங்கி மூன்று நாட்களுக்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில்சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் "விரும்புகிறேன்" படத்தின் ஹீரோ பிரசாந்தும், இயக்குனர் சுசி. கணேசனும் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று இரவு அவர்கள் மலேசியா புறப்பட்டுச் செல்கின்றனர்.


Please Wait while comments are loading...