»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

தேசிய விருது பெற தமிழகத்தின் சார்பில் 6 படங்கள் போட்டியில் உள்ளன.

ஆண்டு தோறும் மத்திய அரசு, சிறந்த படங்களுக்கான தேசிய விருதினை வழங்கி வருகிறது. கடந்த 7ஆண்டுகளில் 2000ம் ஆண்டு மட்டும் தான் தமிழ்ப் படமான வானத்தைப் போல விருதை வென்றது. மற்றபடிஎல்லாமே ஹிந்திப் படங்களுக்கே தரப்பட்டு வந்தன.

இந் நிலையில் ஃபிலிம் சேம்பர் சார்பில், தேசிய விருதுக்கான போட்டிக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடஆகிய மொழிகளில் இருந்து தலா ஒரு படம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழில் ரன் படம்சிறந்த ஜனரஞ்சக பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந் நிலையில் மேலும் பல நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த படங்களை தாங்களாகவே போட்டிக்கு அனுப்பிவைத்துள்ளன.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது அன்பே சிவம், உன்னை நினைத்து ஆகிய படங்களை போட்டிக்குஅனுப்பியுள்ளது.

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தாங்கள் தயாரித்த ரோஜாக்கூட்டம் மற்றும் ரமணா ஆகிய படங்களையும்,தங்கர்பச்சான் தனது அழகி படத்தையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபோல இந்தியன் பனோரமா விருதுக்கும் அன்பே சிவம் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர ரிலீசுக்காகக்காத்திருக்கும் இன்று முதல் படமும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அழகி, அன்பே சிவம், ரமணா போன்ற உண்மையிலேயே நல்ல படங்களை மதித்து விருது தருவார்களாஅல்லது வழக்கம்போல் ஏதாவது ஒரு இந்தி படத்துக்கு விருதைத் தந்துவிட்டு தங்களது கடமையை முடித்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil