»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழின் திரைப்பட விழாவில், தமிழில் சிறந்த நடிகருகான விருதுவிக்ரமுக்கும், நடிகைக்கான விருது சிம்ரனுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனருக்கான விருது பாலாவுக்கு வழங்கப்பட்டது.

சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சிறந்ததிரைப்பட கலைஞர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

22-வது திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில், சனிக்கிழமை இரவு நடந்தது. இதில் சிறந்தகலைஞர்களுக்கான விருதுகள் வென்றவர்கள் விவரம்:

நடிகர்: விக்ரம்

நடிகை: சிம்ரன்

பாப்புலர் நடிகர்: சூர்யா

பாப்புலர் நடிகை: ஷெரீன்

புதுமுக நடிகர்: ஸ்ரீகாந்த்

புதுமுக நடிகை: கிரண்

புதுமுக இயக்குனர்: ஹரி

இயக்குனர்: பாலா

சிறப்பு இயக்குனர்: மணிரத்தினம்

சிறந்த படம்: கன்னத்தில் த்தமிட்டால்

பின்னணிப் பாடகர்: ஸ்ரீனிவாஸ்

பின்னணி பாடகி: அனுராதாஸ்ரீராம்

காமெடி நடிகர்: விவேக்

காமெடி நடிகை: கோவை சரளா

வில்லன்: அலெக்ஸ்

குழந்தை நட்சத்திரம்: கீர்த்தனா

கேமரா மேன்: கே.எஸ்.செல்வராஜ்

ஸ்டண்ட் டைரக்டர்: விக்ரம் தர்மா

வசனகர்த்தா: சரண்

நடன இயக்குனர்: பிருந்தா

கதையாசிரியர்: சேரன்

பாடலாசிரியர்: தாமரை

இசையமைப்பாளர்: பரத்வாஜ்

விமர்சகர் விருது: தங்கர் பச்சான்

செவாலியே சிவாஜி விருது: நடிகர் சிரஞ்சீவி

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil