»   »  பாவ்னா-அஜீத்.. பிலிம்பேர்

பாவ்னா-அஜீத்.. பிலிம்பேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்தில் நடந்த 54வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அஜீத் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

பிலிம்பேர் பத்திரிக்கையின் சார்பில் வழங்கப்பட்டு வரும் திரைப்பட விருதுகள் இந்திய திரையுலகினர் மத்தியில் கெளரவமாக நினைக்கப்படுகிறது.

54வது பிலிம்பேர் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறந்த நடிகராக அஜீத், நடிகையாக பாவனா, இயக்குநராக வசந்த பாலன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

சிறந்த படமாக வெயில் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பாடகராக கானா உலகநாதனும், பாடகியாக ஷ்ரியா கோஷலும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த சப்போர்ட்டிங் நடிகராக பசுபதியும், சிறந்த சப்போர்ட்டிங் நடிகையாக சரண்யாவும் விருது வென்றனர். பாடலாசிரியர் விருது நா.முத்துக்குமாருக்குக் கிடைத்தது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பாடகி பி.சுசீலாவுக்கும், தெலுங்கு நடிகர் கிருஷ்ணராஜுவுக்கும் வழங்கப்பட்டது. லெஜன்ட் விருதினை சிரஞ்சீவியும், மம்முட்டியும் பெற்றனர்.

விருது வழங்கும் விழா ஹைடெக் மாநாட்டு அரங்கில் மிக கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் விஜய், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மம்முட்டி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, தபு, நயனதாரா, ரம்யா கிருஷ்ணன், பாவனா, சந்தியா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், சித்ரா, பி.சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் தீபக் மற்றும் நடிகை அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

விருது வழங்கும் நிகழ்ச்சியின் இடை இடையே கண்கவர் ஆட்டம், பாட்டங்களும் இடம் பெற்றன.

காம்னா ஜெட்மலானி, சிம்ரன், கனிஹா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் தமிழ், மலையாளப் படங்களுக்கு ஆடிப் பாடினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil