twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவி நடிகர்களுக்கும் விருது- ஜெ அறிவிப்பு

    By Staff
    |
    விருது பெறும் விக்ரம்

    சமூகத்தைப் பாதிக்காத வகையில் நல்ல கருத்துக்களை கொண்ட திரைப்படங்களைத்தயாரிக்க வேண்டும் என்று திரையுலகினருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரைவழங்கினார்.

    2003 மற்றும் 2004ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும்விழா சென்னையில் இன்று நடந்தது. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாமண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், விக்ரம், லைலா உள்ளிட்ட விருது பெற்றகலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    விருது பெறும் ஜோதிகா

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சமூகத்தைப் பாதிக்காத வகையில் திரையுலகினர்திரைப்படங்களை தயாரிக்க வேண்டும். வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். எங்கேபோனாலும், எங்கே இருந்தாலும், எங்கே திரும்பினாலும் புதிதாக கற்றுக் கொள்ளஏதோ ஒன்று இருக்கும்.

    எனவே நீங்கள் எங்கே இருந்தாலும், எங்கே போனாலும், எங்கே திரும்பினாலும்அந்தப் புதுமைகளை கற்றுக் கொண்டு உங்களது கலைப்படைப்புகிளில் பிரதிபலிக்கவேண்டும்.

    மறைந்த பின்னணிப் பாடகி லீலாவுக்கு எனது கோரிக்கையை ஏற்று மத்திய அரசுபத்மவிபூஷன் விருதை அளித்துள்ளது. அதேபோல டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலாபோன்ற கலைஞர்களுக்கும் அந்த விருதுகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

    நிகழ்ச்சியில் சசிகலாவுடன் அமைச்சர்கள் (பொன்னையன் உள்பட)

    அடுத்த ஆண்டு முதல் தொலைக்காட்சி கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்என்றார் ஜெயலலிதா.

    2003ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பிதாமகன் படத்தில் நடித்த விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கானவிருது லைலாவுக்கும்,

    2004ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்த ஜெயம்ரவிக்கும் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது பேரழகன் படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும் வழங்கப்பட்டது.

    முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது பெறும் கே.ஆர். விஜயா

    அதே போல ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரனுக்கும், பார்த்திபன் கனவு படத்தை இயக்கிய கரு.பழனியப்பனுக்கும் சிறந்த இயக்குனர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

    மேலும் இந்த இரு ஆண்டுகளின் சிறந்த படங்கள், சிறந்த வில்லன், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த குணச்சித்திரநடிகர், நடிகை, சிறந்த கதை ஆசிரியர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர்,சிறந்த பின்னணிப் பாடகர், பாடகி,

    விருது பெறும் சீதா

    சிறந்த ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், சிறந்த படத் தொகுப்பாளர், ஆர்ட் டைரக்டர், சிறந்த சண்டைப்பயிற்சியாளர், சிறந்த நடன ஆசிரியர், ஒப்பனைக் கலைஞர், தையற் கலைஞர், சிறந்த குழந்தை நட்சத்திரம்,பின்னணி குரல் கொடுப்பவர்கள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

    இதைத் தவிர டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா, பாலசரஸ்வதி தேவி, சாரதாவுக்கு அறிஞர் அண்ணா விருதும்,

    விருது பெறும் லட்சுமி

    டி.பி.முத்துலட்சுமி, எஸ்.என்.லட்சுமி, ஏவி.எம்.ராஜனுக்கு கலைவாணர் விருதும்,

    நடிகைகள் ஷீலா, காஞ்சனா, குசலகுமாரி, ராஜஸ்ரீக்கு எம்.ஜி.ஆர் விருதும்,

    நடிகர் திலகம் விருது வி.எஸ்.ராகவன், லட்சுமி, புஷ்பலதா, கே.ஆர். விஜயாவுக்கும் வழங்கப்பட்டது.

    விக்ரம்-ஜோதிகா-லைலா-ரவிக்கு தமிழக அரசு விருது:
    சிறந்த இயக்குனர்கள் சேரன், பழனியப்பன

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X