»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் விக்ரமுக்கும், சிம்ரனுக்கும் வழங்கப்பட்டன.

மலேஷியாவில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சிம்ரன் தனது காதலர் தீபக்குடன் வந்து கலந்து கொண்டார்.

மலேஷிய தமிழ் டி.வி.சேனலான ஆஸ்ட்ரோ வானவில் மற்றும் சென்னையைச் சேர்ந்த செவன்த் சேனல் நிறுவனம்இணைந்து சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகளை உருவாக்கியுள்ளன. இந்த விழா மலேசியாவில் நடந்தது.

ரோஜாக் கூட்டம் படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை ஸ்ரீகாந்த் பெற்றார். சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு செய்யப்பட்ட த்ரிஷா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் சங்கவி விருதைப்பெற்றுக் கொண்டார்.

சிறந்த நகைச்சுவை நடிகராக விவேக், நடிகையாக கோவை சரளா ஆகியோர் தேர்வு பெற்றனர். சிறந்தகுணச்சித்திர நடிகராக பிரகாஷ்ராஜ் விருது பெற்றார்.

சிறந்த குணச்சித்திர நடிகையாக தேர்வு செய்யப்பட்டார் தேவயானி.

சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கலாபவன் மணிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த கேமரா மேனாக ரவி.கே.சந்திரன், சிறந்த டான்ஸ் மாஸ்டராக தினேஷ், சிறந்த பாடல் ஆசிரியராகபா.விஜய், சிறந்த இசையமைப்பாளராக பரத்வாஜ், சிறந்த பின்னணிப் பாடகராக சீனிவாஸ், பாடகியாக அனுராதாஸ்ரீராம் ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.

சிறந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கான விருது மணிரத்னத்துக்கு கிடைத்தது. அவர் விழாவுக்குவரவில்லை. அவர் சார்பில் சிம்ரன் விருதைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த நடிகராகத் தேர்வு பெற்ற விக்ரமுக்கு இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டமான் விருதை வழங்கினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குநர் பாரதிராஜாவுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த விழா தென்ஆப்பிரிக்காவில் உள்ள சன் சிட்டியில் நடக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil