»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

49வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் படமான ஊருக்கு நூறு பேரு படத்தை இயக்கிய இயக்குனர் பி.லெனின் மிகச் சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வி.டி.விஜயனுடன் சேர்ந்து தமிழ் படங்களை எடிட்டிங் செய்து வரும் லெனின் டைரக்ட் செய்துள்ள இரண்டாவது படம் இது.

சிறந்த இசையமைப்பாளராக லகான் படத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகராக மலையாள நடிகர் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருது இந்தி நடிகை தபு மற்றும் மலையாள நடிகை ஷோபனா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இந்தஇருவருக்குமே இது இரண்டாவது தேசிய விருதாகும்.

சிறந்த படமாக நடிகை செளந்தர்யா நடித்த கன்னடப் படமான தீவிபா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தங்கத் தாமரை விருதுவழங்கப்படவுள்ளது. இந்தப் படத்தை இயக்கியவர் கிரிஷ் காசரவள்ளி. இந்தப் படத்தை நடிகை செளந்தர்யா தான் தயாரித்து நடித்தார்.காசரவள்ளி தயாரித்துள்ள படம் தேசிய விருது பெறுவது இது நான்காவது முறையாகும்.

சாந்தினி பார் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தபுவுக்கு இந்த விருது தரப்படுகிறது. நடிகை ரேவதி இயக்கிய மித்ரு-மை பிரண்ட்இந்தி-ஆங்கில படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஷோபனாவுக்கு இந்த விருது தரப்படுகிறது.

நடிகர் முரளி 300க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தவர். தமிழில் டும்..டும்..டும்.. படத்தில் ஜோதிகாவின் அப்பாவாக நடித்தார்.ஜெமினி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். நெய்துகாரன் (நெசவாளி) என்ற மலையாளப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காகஇந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தபுவுக்கும் ஷேபனாவுக்கு இது இரண்டாவது தேசிய விருதாகும். மாச்சீஸ் படத்தில் சிறப்பாக நடித்தற்காக தபு முதல் தேசிய விருதைப்பெற்றார். மலையாளப் படமான மனிச்சித்ரதாள் படத்துக்காக ஷோபான ஏற்கனவே தேசிய விருது பெற்றுள்ளார்.

ஆஸ்கர் வரை போய்விட்டு வந்த அமீர் கானின் லகான் படம் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், கன்னடப் படத்துக்கு இந்த விருது போய்விட்டது.

சிறந்த இசை, சிறந்த நடனம், சிறந்த பாடல்கள் ஆகிய விருதுகளும் லகான் படத்துக்குக் கிடைத்துள்ளன.

இந்த விருது பெறுபவர்களைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவராக இருந்தவர் மலையாள டைரக்டர்கே.எஸ்.சேதுமாதவன்.

தனக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், அமீர்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைக்காதது ஏமாற்றம் தருவதாக லகான்இயக்குனர் கவாரிகர் கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil