»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

1999-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு 6 விருதுகள்கிடைத்தன. கமலஹாசனின் ஹே ராம் 3 விருதுகளைத் தட்டிச் சென்றது.

இந்தியாவில் 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 47-வது தேசியதிரைப்பட விருதுகள் டெல்லியில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. கவுதம் கோஷ்,ஜப்பார் படேல், கே. சச்சிதானந்தன் ஆகியோர் கொண்ட குழு இவ் விருதுகளைவியாழக்கிழமை அறிவித்தது.

இதில் தமிழ் திரையுலகிற்கு சந்தோஷம் தரும் விதத்தில் ஆறு விருதுகளை தமிழ் தட்டிச்சென்றது.

தமிழுக்குக் கிடைத்த விருதுகள்:

1. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - சரிகா கமல்ஹாசன் (ஹே ராம்)

2. அதுல் குல்கர்னி - சிறந்த துணை நடிகர் (ஹே ராம்).

3. மந்த்ரா - ஸ்பெஷல் எபக்ட்ஸ் (ஹே ராம்).

4. சேது - சிறந்த பிராந்திய தமிழ் படம் ( இயக்கம் பாலா).

5. வைரமுத்து - சிறந்த பாடலாசிரியர்.

6. பிளைன்ட் போல்டட் - சிறந்த குறும்படம் (இயக்கம் ஏ.ஸ்ரீராம்)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு உற்சாகம் தரும் விதத்தில் விருதுகள் கிடைத்துள்ளன.

யு.என்.ஐ.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil