twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வங்காள நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

    By Shankar
    |

    Soumitra Chatterjee
    டெல்லி: இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே, இந்த ஆண்டு வங்காள நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு (77) வழங்கப்பட்டுள்ளது.

    சத்யஜித்ரேயின் முதல்படம் தொடங்கி அவர் இயக்கத்தில் தொடர்ந்து 14-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சௌமித்ரா சட்டர்ஜி.

    இவர் கடந்த 1935 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதியன்று பிறந்தார். இவரது முதல் படம் சத்யஜித்ரேயின் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த 'அபர் சன்சார்' ஆகும். பிரெஞ்ச் அரசால் வழங்கப்படும் உயரிய விருதான 'ஆபீசியர் டீ ஆர்ட்ஸ் இ மேடிஎர்ஸ்' (Officier des Arts et Metiers) என்ற விருதைப் பெற்றுள்ளார்.

    சத்யஜித்ரே தவிர, புகழ்பெற்ற இயக்குநர்கள் மிருணாள் சென், தபன் சின்ஹா போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளார் சௌமித்ரா சாட்டர்ஜி.

    2008-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

    விருதுகள் விஷயத்தில் சௌமித்ரா சாட்டர்ஜி பெரும் சர்ச்சைக்காரராக அரசுக்குத் திகழ்ந்தார் என்றால் மிகையல்ல.

    கடந்த 1970 ஆம் ஆண்டில் இவருக்கு அரசு 'பத்ம ஸ்ரீ' விருதை அறிவித்தது. ஆனால் அதை வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    அதேபோல, தேசிய விருது தேர்வுக் குழுவின் தேர்வு முறையைக் கண்டித்து 2001-ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் ஜூரி விருதை புறக்கணித்தார்.

    ஆனால் பின்னர் 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 'பத்ம பூஷன்' விருதை பெற்றுக்கொண்டார். அதேபோல, 2008-ல் சிறந்த நடிகர் விருதினையும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை எனப் புகழப்படுகிறார். இந்தியாவுக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய அவர் 19 ஆண்டுகாலம் இந்திய சினிமாவை வளர்த்தெடுத்தவர் என்பதால், 1969 ஆண்டு முதல் இந்த உயர்ந்த விருதினை அவர் பெயரில் வழங்குகிறது இந்திய அரசு.

    Read more about: விருது award
    English summary
    Veteran Bengali actor Soumitra Chatterjee will receive the 2011 Dada Saheb Phalke Award for lifetime contribution to cinema. Chatterjee, 77, who has won a National Award in 2008 for his film 'Podokkhep', is an iconic actor in Bengali cinema with a career spanning over half a century. Sources said the award jury has finalised 77-year-old Chatterjee's name and an announcement in this regard would soon be made.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X