»   »  'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது!

'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புரையோடிப்போய் கிடக்கும் மது கலாசாரத்துக்கு எதிராக கவிஞர் கபிலன் வைரமுத்து, 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' எனும் தனிப்பாடலை இயற்றினார். இந்த பாடலை பாலமுரளி பாலு இசையில் டி.ராஜேந்தர் பாடினார். இது நல்ல வரவேற்பை பெற்றது.

Big recognition for Kabilan Vairamuthu’s Yenthiru Anjali Yenthiru

இந்நிலையில், இந்த பாடலை இயற்றியதற்காக கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் டிவிஎம் சேவா பாலம் இந்த விருதை அறிவித்துள்ளது.

Big recognition for Kabilan Vairamuthu’s Yenthiru Anjali Yenthiru

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை அந்த அமைப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில், கபிலன் வைரமுத்து, எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆண்ட்ரியாவின் காதல் கனவு நனவானது... 'ஹானஸ்ட்லி' பாடல் சொல்லும் செய்தி! ]

எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி, மனித நேயர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Dean of government stanley hospital Ponnambala Namachivaayam, Plastic Surgeon Ramadevi, Inspector of Police Kanchana, writer lyricist Kabilan Vairamuthu are the few to be awarded for their social reform efforts on the occasion of DVM Seva Paalam’s grand event marking the organisation’s 21st year in the field of social service and awareness.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more