»   »  திரைப்பட விருது- 2002: சிறந்த நடிகர் மாதவன்

திரைப்பட விருது- 2002: சிறந்த நடிகர் மாதவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை தமிழக அரசுமொத்தமாக அறிவித்துள்ளது.

ரன், அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மாதவனும், இவன்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மீனாவும் சிறந்த நடிகர், நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்ததிரைப்படமாக ரமணா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது 2002க்கு..

சிறந்த படம்: ரமணா

சிறந்த நடிகர்: மாதவன்

சிறந்த நடிகை: மீனா

சிறந்த இயக்குநர்: மணி ரத்னம்.

சிறந்த வில்லன்: நாசர்.

சிறந்த நகைச்சுவை நடிகர்: விவேக்

சிறந்த குணச்சித்திர நடிகர்: ஜனகராஜ்

சிறந்த குணச்சித்திர நடிகை: அனுஹாசன்

சிறந்த இசையமைப்பாளர்: சிற்பி

சிறந்த பாடலாசிரியர்: ரவிசங்கர்

சிறந்த பின்னணிப் பாடகர்: உன்னி மேனன்

சிறந்த பின்னணிப் பாடகி: சின்மயி

சிறந்த நடன ஆசியர்: திணேஷ்

சிறந்த பின்னணிக் குரல்: (ஆண்) முரளி குமார், (பெண்) அனுராதா

கலைத்துறை வித்தகர் விருதுகள்:

அறிஞர் அண்ணா விருது: ஜனா ராணி

கலைவாணர் விருது: பி.பி.ஸ்ரீனிவாஸ்

ராஜா சாண்டோ விருது: ஏவி.எம்.சரவணன்எம்.ஜி.ஆர். விருது: ஈ.வி.சரோஜா

கண்ணதாசன் விருது: எம்.எஸ்.விஸ்வநாதன்

நடிகர் திலகம் விருது: எம்.சரோஜா

இது 2001க்கு..

நந்தா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2001ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், ஆனந்தம்,புன்னகை தேசம் ஆகிய படங்களில் நன்றாக நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருது ஸ்னேகாவுக்கும்கிடைத்துள்ளது.

சிறந்த படமாக விரும்புகிறேன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்கிய சுசி. கணேசன் சிறந்தடைரக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த படம்: விரும்புகிறேன்

2வது படம் பாண்டவர் பூமி

3வது படம் ஆனந்தம்

சிறந்த குடும்பப் படம்: சொன்னால் தான் காதலா.

சிறப்புப் படம்: பூவெல்லாம் உன்வாசம்.

சிறந்த நடிகர்: சூர்யா

சிறந்த நடிகை: ஸ்னேகா

சிறந்த நடிகர் சிறப்பு விருது: அஜீத்

சிறந்த இயக்குநர்: சுசி.கணேசன்

சிறந்த வில்லன்: அலெக்ஸ்

சிறந்த நகைச்சுவை நடிகர்: வடிவேலு

சிறந்த நிகைச்சுவை நடிகை: கோவை சரளா.

சிறந்த இசையமைப்பாளர்: வித்யாசாகர்.

சிறந்த உரையாடல்: ஷாஜகான்

சிறந்த பாடலாசியர்: சினேகன்

சிறந்த பின்னணிப் பாடகர்: உன்னி கிருஷ்ணன்

சிறந்த பின்னணிப் பாடகி: சுஜாதா

சிறந்த நடன ஆசிரியர்: சின்னி பிரகாஷ்

சிறந்த குழந்தை நட்சத்திரம்: டி.ஆர்.குறளரசன்

சிறந்த பின்னணிக் குரல்: (ஆண்) சாய் ரவி, (பெண்) ஸ்ரீ ஜா

கலைத்துறை வித்தகர் விருதுகள்:

அறிஞர் அண்ணா விருது: பாரதிராஜா

கலைவாணர் விருது: ராஜசுலோசனா

ராஜா சாண்டோ விருது: பாலாஜி

எம்.ஜி.ஆர். விருது: பி.எஸ்.சரோஜா

கண்ணதாசன் விருது: வாணிஸ்ஸ்ரீ

நடிகர் திலகம் விருது: ரவிச்சந்திரன்

தியாகராஜ பாகவதர் விருது: வைஜெயந்தி மாலா

இது 2000க்கு..

2000ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படமாக வானத்தைப் போல தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை

இயக்கிய விக்ரமனுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த படம்: வானத்தைப் போல

சிறந்த படம்: 2வது விருது- வானவில்

சிறந்த படம்: 3வது விருது- வெற்றிக் கொடி கட்டு

சிறப்புத் திரைப்படம்: பாரதி

சிறந்த குடும்பப் படம்: பட்ஜெட் பத்மநாபன், உயிலே கலந்தது

சிறந்த நடிகர்: முரளி (கடல் பூக்கள்)

சிறந்த நடிகை: தேவயானி (பாரதி)

சிறந்த இயக்குனர்: விக்ரமன்

சிறந்த வில்லன்: பிரகாஷ் ராஜ்

சிறந்த நகைச்சுவை நடிகர்: வடிவேலு

சிறந்த உரையாடல்: சேரன்

சிறந்த கதையாசிரியர்: மனோஜ்குமார்

சிறந்த பாடலாசியர்: தாமரை

சிறந்த பின்னணிப் பாடகர்: ஹரீஷ் ராகவேந்தர்

சிறந்த பின்னணிப் பாடகி: பவதாரணி

சிறந்த இசையமைப்பாளர்: தேவா

சிறந்த ஒளிப்பதிவாளர்: ஆனந்த குட்டன்

சிறந்த நடன ஆசியர்: பிருந்தா

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்: ஸ்டண்ட் சிவா

சிறந்த பின்னணிக் குரல்: ஆண்: ராஜீவ். பெண்: சவீதா.

கலைத்துறை வித்தகர் விருதுகள்:

அறிஞர் அண்ணா விருது: அஞ்சலி தேவி

கலைவாணர் விருது: பத்மினி

ராஜா சாண்டோ விருது: குன்னக்குடி வைத்தியநாதன்

எம்.ஜி.ஆர். விருது: ஜனா

கண்ணதாசன் விருது: வரலட்சுமி

நடிகர் திலகம் விருது: சுகுமாரி

தியாகராஜ பாகவதர் விருது:எம்.என்.ராஜம்

விருதுகள் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil