»   »  கலர்ஃபுல் 'கோகோ'... டிஸ்னிக்கு தொடர்ந்து ஆறாவது முறையாக ஆஸ்கர் விருது! #Coco #Oscar2018

கலர்ஃபுல் 'கோகோ'... டிஸ்னிக்கு தொடர்ந்து ஆறாவது முறையாக ஆஸ்கர் விருது! #Coco #Oscar2018

Posted By:
Subscribe to Oneindia Tamil
90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: டிஸ்னி நிறுவனத்தின் வெளியீடான கோகோ அனிமேஷன் படத்துக்கு சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதும் இந்தப் படத்துக்கே கிடைத்துள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தப் பிரிவில் டிஸ்னி விருது பெற்று சாதனைப் படைத்துள்ளது.

Coco wins an Oscar

லீ உன்ரிச் (Lee Unkrich) இயக்கத்தில் உருவான கோகோ படம் 200 மில்லியன் டாலரில் தயாராகி, பாக்ஸ் ஆபீஸில் 740 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. கடந்த நவம்பரில் வெளியான இந்தப் படத்துக்கு ஏற்கெனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் இசைப் பிரிவில் கோகோ பரிந்துரைக்கப்பட்டது.

இந்த இரு பிரிவிலுமே விருதுகளை வென்றுள்ளது கோகோ. ஏற்கெனவே வால்ட் டிஸ்னி வெளியிட்ட 5 படங்கள் தொடர்ந்து சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதுகளைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டு கோகோ 6வது முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளது.

English summary
Coco has won the best animated featured film award in 90th Academy award ceremony and it is Disney’s sixth straight victory in the category.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil