»   »  கன்கார்ட் டெக்னாலஜிஸ் இயக்குனருக்கு இந்திரா விருது

கன்கார்ட் டெக்னாலஜிஸ் இயக்குனருக்கு இந்திரா விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைச் சேர்ந்த பிபிஓ நிறுவனமான கன்கார்ட் டிஜிட்டல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர் வி.பாலசுந்தரத்துக்கு இந்திரா காந்தி சம்பாவனா விருது வழங்கப்பட்டுள்ளது.

தனி நபர் சாதனைக்காகவும் நாட்டுக்கு ஆற்றிய சாதனைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ள. தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதாரக் கவுன்சில் இந்த விருதை வழங்கியது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 89வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் மத்திய திட்டத்துறை இணையமைச்சர் ராஜசேகரன், முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், முன்னாள் சிக்கிம் ஆளுநர் செளத்ரி ரன்தீர் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

Read more about: award director gandhi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil