»   »  சிறந்த தொகுப்பாளர்கள் விருதுகளை மீண்டும் தட்டிச் சென்ற கோபிநாத், டிடி

சிறந்த தொகுப்பாளர்கள் விருதுகளை மீண்டும் தட்டிச் சென்ற கோபிநாத், டிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட நட்சத்திரங்களுக்காக ஆண்டு தோறும் விஜய் அவார்ட்ஸ் வழங்கிய விஜய் டிவி தொலைக்காட்சி கலைஞர்களுக்காக கடந்த ஆண்டு முதல் விருது வழங்கத் தொடங்கியுள்ளது. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிப்பவர்கள், தொகுப்பாளர்களில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் சிறந்த தொகுப்பாளர்கள் விருதினை நீயா நானா கோபிநாத், திவ்யதர்ஷினி தட்டிச் சென்றனர்.

இந்த ஆண்டு விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திர பட்டாளங்கள் திரளாக பங்கேற்றனர்.

விஜய் டிவியில் ஆபிஸ், தாயுமானவன், சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு, புதுக்கவிதை, ரெட்டை வால் குருவி, கல்யாணம் முதல் காதல்வரை, ஆண்டாள் அழகர் என பல சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. ஏராளமான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. சிறந்த நடிகர், நடிகை, தொகுப்பாளர்கள், சிறந்த தொடர், சிறந்த நிகழ்ச்சி உள்ளிட்ட 33 பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஜோடி

சிறந்த ஜோடி

விஜய் டிவி சீரியல்களில் ‘கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்த பிரியா - அமீத் ஜோடி சிறந்த ஜோடி விருதை தட்டிச் சென்றது.

ஹீரோ வேட்டையன்

ஹீரோ வேட்டையன்

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த வேட்டையன் சிறந்த ஹீரோ விருதை பெற்று கண் கலங்கினார். இந்த விருதினை டிடியும், கோபிநாத்தும் இணைந்து வழங்கினர்.

சிறந்த தொகுப்பாளர்கள்

விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளினி விருதை இரண்டாவது ஆண்டாக திவ்யதர்ஷினி தட்டிச் சென்றார். அதேபோல சிறந்த தொகுப்பாளர் விருதை இந்த ஆண்டும் கோபிநாத் வென்றார். அவருக்கு நடிகர் பார்த்திபன் விருது வழங்கினார்.

மைனாவிற்கு விருது

மைனாவிற்கு விருது

சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியின் தோழியாக நடிக்கும் மைனாவிற்கு விருது வழங்கப்பட்டது. அதேபோல ஆண்டாள் அழகரில் நடித்த ஸ்டாலின் சிறந்த துணைநடிகர் விருதை தட்டிச் சென்றார்.

அது இது எது டீம்

அது இது எது டீம்

சீரியல் அல்லாத நிகழ்ச்சியான அது இது எது நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கும் அமுதவன், வடிவேல் பாலாஜி ஆகியோர் சிறந்த காமெடி நடிகர்கள் விருதை தட்டிச் சென்றனர்.

நடிகை ராதா

நடிகை ராதா

ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் நடுவரான நடிகை ராதா சிறந்த நடுவர் விருதை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கையினால் பெற்றுக் கொண்டார்.

செந்தில் – ஸ்ரீஜா

செந்தில் – ஸ்ரீஜா

கடந்த ஆண்டு ரீல் ஜோடியாக சரவணன் மீனாட்சி தொடரில் செந்தில் ஸ்ரீஜா சிறந்த ஜோடி விருதை தட்டிச் சென்றனர். இந்த ஆண்டு இவர்கள் ரியல் ஜோடியாக தம்பதிகளாக வந்து விஜய் டிவி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

English summary
DD alis Divya Dharshini and Gopinath again have won the award for Best Anchors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil