»   »  ஆஸ்கர் விருது பெறும் நடிகைகளின் வாழ்வில் 'இப்படி' ஒரு சோகம் ஏற்படுமா?

ஆஸ்கர் விருது பெறும் நடிகைகளின் வாழ்வில் 'இப்படி' ஒரு சோகம் ஏற்படுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த நடிகை அல்லது சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெறும் நடிகைகளுக்கு விவாகரத்து ஆகும் அல்லது அவர்களின் காதலர்கள் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்று தெரியுமா?

ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்பது அனைத்து நடிகர், நடிகைகளின் கனவாகும். ஆனால் ஆஸ்கர் விருதோடு சேர்ந்து ஒரு சோகமும் உள்ளது. அதற்கு ஆஸ்கர் காதல் சாபம் என்று பெயர் வைத்துள்ளனர்.

சிறந்த நடிகை அல்லது சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெறும் நடிகைகளுக்கு விவாகரத்து ஆகும் அல்லது அவர்களின் காதலர்கள் பிரிந்து சென்றுவிடுவார்களாம்.

 ஆய்வு

ஆய்வு

ஆஸ்கர் காதல் சாபம் பற்றி ஆய்வு கூட செய்துவிட்டார்கள். அந்த ஆய்வு முடிவின்படி ஆஸ்கர் விருதை பெற்றால் மட்டும் அல்ல பரிந்துரைக்கப்படும் நடிகைகளும் விவாகரத்து அல்லது காதல் முறிவுக்கு ஆளாவது தெரிய வந்துள்ளது.

 விவாகரத்து

விவாகரத்து

1936ம் ஆண்டில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட 266 திருமணமான நடிகைகளில் 159 பேருக்கு விவாகரத்து நடந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு சிறந்த நடிகைக்காக ஆஸ்கர் விருது பெற்ற எம்மா ஸ்டோனுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏஞ்சலினா ஜூலி

ஏஞ்சலினா ஜூலி

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி கடந்த 1998ம் ஆண்டு கேர்ள், இன்டரப்டட் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வாங்கிய மறுஆண்டே கணவர் பில்லி பாப் தார்ண்டனை விவாகரத்து செய்தார்.

 ஹிலரி ஸ்வான்க்

ஹிலரி ஸ்வான்க்

ஹாலிவுட் நடிகை ஹிலரி ஸ்வான்க் இரண்டு முறை ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார். விருது வாங்கிய பிறகு அவரும், அவரது கணவர் சாட் லோவும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

 கேட் வின்ஸ்லெட்

கேட் வின்ஸ்லெட்

டைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகை கேட் வின்ஸ்லெட் 2008ம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற பிறகு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

English summary
As 89th Oscars function was held in Los Angeles, people are talking about Oscar love curse.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil