»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்த 20 வது சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை வாலி படத்தில் ஜோடியாக நடித்த நடிகர் அஜித்குமாரும், சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சிம்ரனும் பெற்றனர்.

சென்னையில் சனிக்கிழமை மாலை 20 வது சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழா நடந்தது.

ஒரு கோபக்கார இளைஞனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "சேது படத்தை இயக்கிய டைரக்டர் பாலாஷ சிறந்த புதுமுக இயக்குநராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த புதுமுக நடிகருக்கான விருது, தாஜ்மஹால் படத்தில் அறிமுகமான நடிகர் மனோஜூக்கும், பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் அறிமுகமானநடிகை ஜோதிகாவுக்கு சிறந்த புதுமுக நடிகை விருதும் வழங்கப்பட்டது.

நடிகர் விக்ரமுக்கு ஹீரோ ஹோண்டா விமர்சகர் விருது வழங்கப்பட்டது. வாலி, அமர்க்களம் படத்தில் நடித்த நடிகர் அஜித் சிறந்த நடிகருக்கான விருதையும், நடிகைசிம்ரன் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றனர்.

வானத்தைப்போல படத்தை இயக்கிய இயக்குநர் விக்ரமனுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த குணசித்திர நடிகராக நடிகர் விஜயகாந்த்தும் (வானத்தைப்போல), சிறந்த குணசித்திர நடிகையாக மீனாவும் (ஆனந்தப் பூங்காற்றே)தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்வன் படத்தில் நடித்த ரகுவரன் சிறந்த வில்லன் நடிகராகவும், கோவை சரளா சிறந்த காமெடி நடிகையாகவும், விவேக்சிறந்த காமெடி நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாலி படத்துக்கு இசையமைத்த தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், வைரமுத்துவுக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக,ஸ்ரீனிவாஸ், ஸ்வர்ணலதா ஆகியோருக்கு சிறந்த பின்னணிப் பாடகர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

கிரீன் லேபிள் சாதனையாளர் விருது-கவுசல்யா, சிறந்த கதாசிரியர்-சேரன் (வெற்றிக்கொடிகட்டு), சிறந்த வசனகர்த்தா-ராஜகுமாரன் (நீ வருவாய்என), சிறந்த ஒளிப்பதிவாளர்- ரத்தினவேலு (சேது), சிறந்த நடன இயக்குநர் - ராஜூ சுந்தரம் (வாலி), சிறந்த சண்டை பயிற்சியாளர்- ஜாக்குவார்தங்கம்.

டி.வி. தொடர்கள்:

சிறந்த டி.வி. தொடர்- ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சொந்தம், சிறந்த நடிகர் ரவி ராகவேந்தர், சிறந்த நடிகை - இந்து (இப்படிக்குத் தென்றல்), சிறந்தஇயக்குநர்- சிவி.ராஜேந்திரன் (கோகிலா எங்கே போகிறாள்).

தேவ் ஆனந்த்:

இந்த நூற்றாண்டின் சிறந்த ஹீரோவாக இந்தி நடிகர் தேவ் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பேசுகையில், இந்த விருது கிடைத்தது எனக்கு மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாத்துறையில் மேலும் மேலும் உயர இந்த விருது வழிவகுக்கும் என்றார்.

சிறந்த இயக்குநரான சுபாஷ் கை, சினிமாத் துறையில் 25 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்துள்ளதால், கெளரவிக்கப்பட்டார்.

வீரப்பனால் கடத்தப்பட்டு சுமார் 108 நாட்கள் காட்டில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமார், தனது விடுதலைக்கு உதவிய தமிழக, கர்நாடக மக்களுக்குநன்றி தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார். ராஜ்குமார் நடித்த சப்தவேதி சிறந்த கன்னடப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழித் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி முதன் முறையாக ஐந்து மொழிகளில் இன்டர்நெட்டில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விருது வழங்கும் விழாவையொட்டி, சிறந்த பாடல்கள், நாட்டிய அரங்கேற்றம், மாஜிக் ஷோக்கள் போன்றவை விருது வழங்கும் நிகழச்சியில்இடம்பெற்றன.

யு.என்.ஐ.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil