»   »  கேன்ஸ் விழாவுக்கு வெயில், பள்ளிக்கூடம்

கேன்ஸ் விழாவுக்கு வெயில், பள்ளிக்கூடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம், வசந்தபாலனின் வெயில் ஆகிய படங்கள் கலந்துகொள்ளவுள்ளன.

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகத் திரை ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுவது கேன்ஸ் திரைப்பட விழா. உலகின் பல்வேறு மொழிப் படங்கள் இங்கு திரையிடப்படும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க இயக்குநர் அமீரின் கைவண்ணத்தில் உருவாகி, வெளியாகி, வெற்றியும் பெற்றுள்ள பருத்தி வீரன் கலந்து ெகாள்கிறது.

தற்ேபாது மேலும் இரு தமிழ்ப் படங்கள் கேன்ஸ் விழாவுக்கு செல்லவுள்ளன.

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெற்றிப் படம் வெயில் அதில் ஒன்று. ஷங்கர் தயாரிப்பில் உருவான இப்படத்தில் பரத், பசுபதி, பாவனா உள்ளிட்ேடார் நடித்துள்ளனர். ஆங்கில சப் டைட்டில் கார்டுடன் வெயில் கேன்ஸ் சென்றுள்ளது.

அதேபோல தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் படமும் கேன்ஸ் விருதுக்கு அனுப்பப்பபட்டுள்ளது.

விஸ்வாஸ் சுந்தர் தயாரிப்பில், தங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சினேகா, நரேன், மீனாள் உள்ளிட்ேடார் நடித்துள்ளனர். தங்கரும் முக்கிய வேடத்தில் வருகிறார்.

படித்த பள்ளிக்கூடத்தை மறக்காதவர்கள் நிறையப் பேர். ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்தை மீண்டும் எட்டிப்பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. நமக்கு எல்லாவற்றையும் கற்றுத் தரும் கூடம்தான் பள்ளிக்கூடம். 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள பள்ளிக்கூடத்துக்கு ஒரு பிரச்சினை வருகிறது.

அந்தப் பிரச்சினையை அப்பள்ளிக்கூடத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை என்கிறார் தங்கர்.

கருத்துள்ள படமான பள்ளிக்கூடத்தில் படித்த பள்ளியிலேேய ஆசிரியையாக வேலை பார்ப்பவராக சினேகா, கலெக்டராக நரேன், 10வது வரை படித்து விட்டு கூலியாக இருக்கும் தங்கர்பச்சன், திரைப்பட இயக்குநராக சீமான், கிராமத்து செவிலிப் பெண்ணாக ஷ்ரேயா ரெட்டி ஆகிேயார் நடித்துள்ளனர்.

ேகன்ஸ் விழா மே 16ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா இறுதியில் சிறந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது வழங்கப்படும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil