»   »  நவ. 1ல் திரைப்பட விருது வழங்கும் விழா?

நவ. 1ல் திரைப்பட விருது வழங்கும் விழா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நவம்பர் 1ம் தேதி தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் எனத்தெரிகிறது.

2000, 2001 மற்றும் 2002ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஒட்டுமொத்தமாகஅறிவிக்கப்பட்டன. சூர்யா, முரளி, மாதவன் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், சினேகா, தேவயானி, மீனாஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் அறிவிக்கப்பட்டனர்.

வடிவேலு, விவேக், கோவை சரளா ஆகியோர் சிறந்த காமடி நடிகர், நடிகையாக தேர்வாகினர். சிறந்தவில்லன்களாக நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த இயக்குனர்களுக்கான விருதை மணிரத்னம், சுசி கணேசன், விக்ரமன் ஆகியோர் பெற்றனர். சிறந்தபடங்களாக வானத்தைப் போல, ரமணா, விரும்புகிறேன் ஆகியவை தேர்வு பெற்றன.

இந்த விருதுகள் வழங்கும் விழா பின்னர் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விழா நவம்பர்1ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் திரைப்படப் பிரிவினர் செய்த வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவுக்குராசியானதாகக் கருதப்படும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திலேயே விழாவை நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெவுக்கு பாராட்டு விழா:

இதற்கிடையே தமிழ்த் திரையுலகினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்ததற்காகவும், திருட்டு விசிடியை ஒழிக்கநடவடிக்கை எடுத்தற்காகவும் வரும் நவம்பர் 8ம் தேதி பாராட்டு விழா நடத்த திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

இந் நிகழ்ச்சியில் திரைப்படத்துறையின் சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு பெரிய அளவில் ஒரு தொகைவழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை சரத்குமார் தலைமையில் திமுக கலைஞர்கள் புறக்கணிக்கப்பார்கள் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil