»   »  நோ-எக்ஸிட்: அமெரிக்காவை கலக்கும் தமிழர்

நோ-எக்ஸிட்: அமெரிக்காவை கலக்கும் தமிழர்

Subscribe to Oneindia Tamil

மனோஜ் நைட் ஷியாமளனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இன்னொரு தமிழரும் ஹாலிவுட்டில் அதிரடியாய் அடியெடுத்துவைத்திருக்கிறார்.

சாப்ட்வேர் என்ஜினியரான ஆனந்த் அழகப்பன் தனது நோ எக்ஸிட் என்ற குறும்படத்தின் மூலம் அனைவரையும் கலங்கடித்திருக்கிறார்.இந்த வாரம் நியூயார்க்கில் நடக்கும் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படவுள்ளது.


(இந்த விழாவில் இடம் பெறும் இன்னொரு படம் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால்..)

ஏற்கனவே புளோரிடா மாகாணத்தில் நேப்பிள்சில் நடந்த உலக சினிமா விழாவிலும், லாஸ் என்ஜெல்சில் நடந்த சர்வதேச குறும்படவிழாவிலும் திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றது இந்தப் படம்.

27 வயதான ஆனந்தின் இந்தப் படம் வெகு ஜாலியாகத்தான் தொடங்குகிறது. ஆனால், அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களுடன் கொண்டுபோய் அட்டகாசமான முடிவுடன் நிறைவு செய்கிறார் ஆனந்த்.

கதையின் அவுட்-லைன் இது தான்:

சிகாக்கோவில் வசிக்கும் ஒரு இளம் இந்தியப் பெண் (காயத்ரி தாவே) தனது கிரெடிட் கார்ட் பேலன்ஸை அறிந்து கொள்வதற்காக டோல்ப்ரீ எண்னைத் தொடர்பு கொள்வதில் கதை தொடங்குகிறது. அந்த அழைப்புக்கு உடனடியாக பதில் கிடைத்துவிடவா போகிறது.. அந்தநம்பரை அழுத்துங்கள், இந்த நம்பரை அழுத்துங்கள் என்று வினாடிகள் கரைகின்றன. இடையிடையே ஏகப்பட்ட விளம்பரங்கள்....

நகம் கடித்தவாரே வினாடிகளைக் கரைக்கும் அந்தப் பெண்ணின் டென்சனை ஜாலியாக சொல்லியபடி தொடங்கும் கதையில் அடுத்து திடுக்திருப்பம். பாப்கார்ன் தின்று கொண்டோ, பக்கத்தில் கேர்ள் பிரண்டுடன் கடலை போட்டுக் கொண்டோ சும்மாகாச்சுக்கும் படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களை, நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்.

ஷியாமளன் படங்களின் முடிவு மாதிரி இருக்கிறது இந்தத் திருப்பம்.. அந்த போன் காலில் இருந்து தப்பிக்க முடியாமல் அந்த யுவதிசிக்குகிறார்..

இப்படி நம் பல்ஸை எகிற வைத்துவிட்டு மீண்டும் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் ரிலாக்ஸ் ஆக்குவதிலும் சரி, அமெரிக்காவில் வாழும்இந்தியர்களின் வாழ்க்கையொட்டத்தை பதிவு செய்ததிலும் சரி.. பின்னி இருக்கிறார் ஆனந்த்.

7 நிமிடமே ஓடும் இந்தப் படத்தில் அத்தனை செரிவு.. ஏகப்பட்ட விஷயங்களை அநாயசமாக சொல்லிவிட்டுப் போகிறார். இந்தஇளைஞரிடம் நிறைய விஷயம் இருப்பது புரிகிறது.

வி லவ் இண்டியா என்ற பெயரில் 14 எபிசோட்கள் கொண்ட ஒரு டிராவல் ஷோவை எடுத்து பரபரப்பாக பேசப்பட்டவர் தான் இந்தஆனந்த். வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏன்ஜெல்ஸ், நியூயார்க் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட இந்த டிராவல் ஷோ அமெரிக்க டிவியில்ஒளிபரப்பானது.

இப்போது 4 சக நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். ஆல் த பெஸ்ட் மேன்!!

நியூயார்க்கில் நடக்கும் இந்த தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான கன்னத்தில்முத்தமிட்டாலும் இடம் பெறப் போகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil