»   »  பிலிம்பேர் விருது... சிறந்த நடிகர் உள்ளிட்ட 8 பிரிவுகளில் கபாலி பரிந்துரை!

பிலிம்பேர் விருது... சிறந்த நடிகர் உள்ளிட்ட 8 பிரிவுகளில் கபாலி பரிந்துரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் உள்பட 8 பிரிவுகளில் பிலிம்பேர் விருதுக்காக ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் தனியார் நடத்தும் விருதுகளில் முதலிடத்தில் உள்ளது பிலிம்பேர் விருது.

ஆண்டு தோறும் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள மொழிப் படங்களுக்கு பிலிம்பேர் சவுத் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பிலிம்பேர் சவுத் விருதுக்கான பரிந்துரையில் கபாலி மட்டும் 8 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

சிறந்த நடிகருக்கான விருதுக்கு கபாலி நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதுவரை எட்டு முறை பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த படம்

சிறந்த படம்

சிறந்த படத்துக்கான பிரிவிலும் கபாலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துடன் இறுதிச் சுற்று, விசாரணை, ஜோக்கர், தெறி போன்ற படங்களும் மோதுகின்றன.

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநருக்கான பிரிவில் கபாலி இயக்குநர் பா ரஞ்சித் இடம் பெற்றுள்ளார். அட்லீ, வெற்றி மாறன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் பெயர்களும் இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் கபாலியில் ரஜினி மகளாக நடித்த தன்ஷிகா இடம் பிடித்துள்ளார். அனுபமா, ஐஸ்வர்யா, ராதிகா, நித்யா மேனன் உள்ளிட்டோர் பெயர்களும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசையமைப்பாளர்

கபாலிக்கு இசையமைத்ததற்காக சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சிறந்த பாடல், பாடகர், பாடகி

சிறந்த பாடல், பாடகர், பாடகி

இந்த மூன்று பிரிவுகளிலும் கபாலி இடம் பிடித்துள்ளது. சிறந்த பாடல் பட்டியலில் நெருப்புடாவும், சிறந்த பாடகர் விருது பரிந்துரைப் பட்டியலில் நெருப்புடா பாட்டை எழுதிப் பாடிய அருண் காமராஜும், சிறந்த பாடகிக்கான விருதுப் பிரிவில் மாய நதி... பாடல் பாடிய ஸ்வேதா மேனன் பெயரும் இடம் பெற்றுள்ளன.

English summary
Rajinikanth's blockbuster Kabali has nominated for 8 awards for Filmfare South of 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil