»   »  விக்ரம், லைலாவுக்கு பிலிம்பேர் விருது

விக்ரம், லைலாவுக்கு பிலிம்பேர் விருது

Subscribe to Oneindia Tamil

2003ம் ஆண்டுக்கான தமிழின் சிறந்த நடிகராக விக்ரமையும், சிறந்த நடிகையாக லைலாவையும் பிலம்பேர் சினிமா இதழ் தேர்வு செய்துள்ளது.

பிலிம்பேர் சினிமா இதழ் ஆண்டுதோறும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த சினிமா படங்கள், சிறந்த நட்சத்திரங்களைத் தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

தேசிய விருதுகளுக்கு அடுத்தபடியாக இந்திய சினிமா உலகில் மதிக்கப்படுவது பிலிம்பேர் விருதாகும்.

தென் இந்திய மொழிகளில் 2003-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிதாமகன் படம் மொத்தம் 6 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த படம் - தயாரிப்பாளர் வி.ஏ.துரை

சிறந்த இயக்குனர் - பாலா

சிறந்த நடிகர் - விக்ரம்

சிறந்த நடிகை- லைலா


சிறந்த துணை நடிகர்- - சூர்யா

சிறந்த துணை நடிகை -- சங்கீதா

சிறந்த படத்துக்கான சிறப்பு விருதை அன்பே சிவம் (தயாரிப்பாளர்கள் முரளிதரன், சுவாமிநாதன், வேணுகோபால்) படம் பெறுகிறது. சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை ஹாரிஸ் ஜெயராஜ் காக்க காக்க படத்துக்காக பெறுகிறார்.

சிறந்த நகைச்சுவை நடிகராக விவேக்கும்(சாமி), சிறந்த வில்லனாக- ஜீவனும் (காக்க காக்க) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil