»   »  ஃபில்மிபீட் சினிமா விருதுகள் 2016 பார்ட் 1

ஃபில்மிபீட் சினிமா விருதுகள் 2016 பார்ட் 1

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

யார் யாரோ விருதுகள் தரும்போது சினிமா வெப்சைட்களின் சூப்பர் ஸ்டார் என்று வாசகர்களால் சொல்லப்படும் நாம கொடுக்கலைன்னா எப்படி?

இதோ ஆரம்பிச்சுட்டோம்... முதல் செட் இதோ... சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட அடுத்த செட் இன்று இரவு ரிலீஸ் ஆகும்...


சிறந்த கதை சமுத்திரக்கனி (அப்பா)

சிறந்த கதை சமுத்திரக்கனி (அப்பா)

குறைந்தபட்ச வணிக விஷயங்கள் கூட இல்லாமல் முழுக்க முழுக்க பாடமாக எழுதப்பட்ட கதை. சொன்ன விதத்தில் பட்ஜெட் காரணமாக காம்ப்ரமைஸ் செய்திருந்தாலும் இப்படி ஒரு கதையை எழுதியதற்காகவே பூங்கொத்து என்ன ஒரு பூந்தோட்டமே தரலாம்.


திரைக்கதை - சுதா கொங்கரா (இறுதி சுற்று)

திரைக்கதை - சுதா கொங்கரா (இறுதி சுற்று)

மூன்று ஆண்டுகள் இந்த படத்தின் திரைக்கதைக்காக சுதா உழைத்த உழைப்பு ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிந்தது. பழகிய கதை தான் என்றாலும் திரைக்கதையால் கட்டிப்போட்டு கிளாப்ஸ் வாங்கினார் சுதா.
வசனம் ராஜு முருகன் (ஜோக்கர், தோழா)

வசனம் ராஜு முருகன் (ஜோக்கர், தோழா)

எளிமையாக வசனங்களால் நம்மை இரண்டு படங்களிலுமே கவர்ந்தார் ராஜுமுருகன். ‘மனுசன் போற இடத்துக்கெல்லாம் மனசு போகாது', 'ஒரே ஒரு செகண்ட்ல என் லைஃப் வெறும் ஞாபகமா மாறிடுச்சு' என்று சி.முருகேஷ்பாபுவுடன் அமைத்த தோழா கூட்டணியாகட்டும், 'நகைக்கடைகாரன் புரட்சி பண்ற நாட்டுல ஜனாதிபதி புரட்சி பண்ணக்கூடாது?, சகாயம் பண்ணுங்கனு சொல்லல.. சகாயம் மாதிரி பண்ணுங்கன்னு தான் கேக்கறேன்...' என்ற பொளேர் ஜோக்கர் வசனங்களாக இருந்தாலும் சரி.. செமையாக ஸ்கோர் செய்தார் ராஜுமுருகன்.


பாடலாசிரியர் தாமரை (தள்ளிப்போகாதே, ராசாளி)

பாடலாசிரியர் தாமரை (தள்ளிப்போகாதே, ராசாளி)

இன்னும் நூறாண்டுகள் கேட்டாலும் அலுக்காத பாடலை தந்தார் தாமரை. கவுதம்மேனனுடன் தாமரை கைகோர்த்தாலே ஸ்பெஷல் தான். போதாதகுறைக்கு ஏஆர்.ரஹ்மானும் சேர இன்னமும் எல்லோருடைய ஃபேவரிட்டாக இருக்கிறது தள்ளிப்போகாதே யும், ராசாளியும்.


பின்னணி பாடகர் ஷான் ரோல்டன் (அடியே அழகே)

பின்னணி பாடகர் ஷான் ரோல்டன் (அடியே அழகே)

தள்ளிப் போகாதேவுக்கு டஃப் ஃபைட் கொடுத்தது அடியே அழகே... பாடல் ரிலீஸான பின்னர் படம் ரிலீஸாக தாமதமானாலும் நிறைய பேர் மொபைலில் காலர் ட்யூனாக இடம் பிடித்தது அடியே அழகே... காரணம் ஷான் ரோல்டனின் வசீகரிக்கும் குரல்.
பின்னணி பாடகி - சித்ரா (கொஞ்சி பேசிட வேண்டாம் - சேதுபதி)

பின்னணி பாடகி - சித்ரா (கொஞ்சி பேசிட வேண்டாம் - சேதுபதி)

கொஞ்சி பேசிட வேணாம்... என்று பாடும்போதே ஒரு மழலையை கொஞ்சுவது போல் கொஞ்சி நம்மை உருக வைத்தார் சித்ரா.
சிறந்த தயாரிப்பு - விசாரணை (வுண்டர்பார் ஃபிலிம்ஸ்)

சிறந்த தயாரிப்பு - விசாரணை (வுண்டர்பார் ஃபிலிம்ஸ்)

தியேட்டர்ல ரெண்டு நாள் மட்டும் ஓடுறா மாதிரி ஒரு கதை இருக்கு. கேக்கறீங்களா? இப்படி சொல்லித்தான் இந்த படத்தை தனுஷை தயாரிக்க வைத்தார் வெற்றிமாறன். படம் நிறைய அரசியலை பேசாமல் பேசியது. தேசிய விருது முதல் ஆஸ்கர் எண்ட்ரி வரை எல்லாமே படம் பேசிய அரசியலுக்கு கிடைத்த கவுரவங்கள்.


கலை இயக்கம் பி.சேகர்(மாவீரன் கிட்டு)

கலை இயக்கம் பி.சேகர்(மாவீரன் கிட்டு)

1980களில் நடக்கும் கதைக்கு அந்த காலகட்டத்துக்கே அழைத்து சென்றார் சேகர். அந்த கால பேருந்து முதல் கல்லூரி, கட்டில் வரை அப்படியே கொண்டு வந்ததில் சேகரின் உழைப்பு அபாரம்.


ஒப்பனை சியான் ஃபுட் (ரெமோ)

ஒப்பனை சியான் ஃபுட் (ரெமோ)

சிவகார்த்திகேயனை மர்லின் மன்றோவாகவும் ரெமோவாகவும் மாற்றியதில் பெரும்பங்கு ஹாலிவுட் மேக் அப் வுமன் சியானுக்கு உண்டு. யோகி பாபுவோடு சேர்ந்து நாமும் சைட் அடிக்க காரணம் சியானின் பெர்ஃபெக்ட் மேக் அப் தான் காரணம்.


நடன இயக்கம் பிரபுதேவா (தேவி)

நடன இயக்கம் பிரபுதேவா (தேவி)

சல் மார் என்று பிரபுதேவா போட்ட ஆட்டத்துக்கு வெகுநாட்கள் கழித்து எழுந்து நடனமாடினார்கள் சினிமா ரசிகர்கள். அது மட்டுமில்லாமல் ஒல்லி பெல்லி தமன்னாவையும் ஒரு பாடலில் நடன பேயாக மாற்றியிருந்தார் நடன புயல். தானொரு எனர்ஜி பேங்க் என்பதை நிரூபித்தார் புயல்.
சண்டைப் பயிற்சி விக்கி (உறியடி)

சண்டைப் பயிற்சி விக்கி (உறியடி)

அந்த இடைவேளை சண்டைக்காட்சியை மறந்திருந்தால் ஒருமுறை யூட்யூபில் பாருங்கள். ஆஸம்... மிகக் குறைந்த பட்ஜெட்டில் பக்கா ஆக்‌ஷன் த்ரில்லிங் மொமெண்டை கொண்டு வந்திருந்தார் விக்கி.


ஆடை வடிவமைப்பு சத்யா (தெறி)

ஆடை வடிவமைப்பு சத்யா (தெறி)

விஜய், சமந்தா, எமி மட்டுமல்ல குழந்தை நைனிகாவுக்கு தந்த காஸ்ட்யூம்கள் கூட இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை. கலர்ஃபுல்லாகவும் அதே நேரத்தில் ரசிக்கும்படியாகவும் ஜித்து ஜில்லாடிக்கு பரவசப்படுத்தியிருந்தார். இன்னும் தெறி படத்தை டிவியில் பார்த்தால் கண்கள் அகல மறுக்க காரணம் படத்தின் காஸ்ட்யூமும்தான்.


(நாளை தொடரும்..)English summary
Here is the cinema awards of Filmibeat.com for the year 2016 (Part 1).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil