முதல்முறையாக ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை... கூடுதல் சிறப்பாக எல்லாருமே நடிகர்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் : கடந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்புடன் விழா நடைபெற்றது. 24 பிரிவுகளில் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்கர் விருதுகள் 2022

ஆஸ்கர் விருதுகள் 2022

ஆஸ்கர் விருதுகள் 2022 விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தினர். முதல்முறையாக 3 பெண்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

சிறப்பான சுவாரஸ்யங்கள்

சிறப்பான சுவாரஸ்யங்கள்

இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாமல் காணப்பட்டது. தன்னுயை மனைவியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு வில் ஸ்மித் மேடைக்கு சென்று அறைவிட்ட நிகழ்வும் நடைபெற்றது. இதனால் லைவ் நிகழ்ச்சி சிலநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

உக்ரைனுக்காக மௌனம்

உக்ரைனுக்காக மௌனம்

உக்ரைனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வேண்டி சில நொடிகள் அரங்கமே மௌனமாக இருந்தது. மேலும் உக்ரைனின் கொடியை சார்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அந்த வண்ணத்தில் அடையாளமாக சிலவற்றை அணிந்து வந்த நிகழ்வும் நடைபெற்றது.

முதல்முறை ஆஸ்கர்

முதல்முறை ஆஸ்கர்

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், நடிகை, துணைநடிகர் மற்றும் துணை நடிகை ஆகிய பிரிவுகளில் வில் ஸ்மித், ஜெசிகா சாஸ்டைன், ட்ராய் க்ராட்சூர் மற்றும் ஆரியானா டீபோஸ் ஆகியோர் விருதுகளை வென்றனர். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இவர்கள் நால்வரும் முதல்முறையாக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர்.

ஆஸ்கர் விருது வென்ற 21ம் நூற்றாண்டின் இளம்பெண்

ஆஸ்கர் விருது வென்ற 21ம் நூற்றாண்டின் இளம்பெண்

இதனிடையே சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருதை 20 வயதான நோ டைம் டு டை படத்திற்காக பில்லி எய்லிஷ் பெற்றுள்ளார். இவர் 21ம் நூற்றாண்டில் பிறந்த முதல் ஆஸ்கர் வின்னர் என்ற பெருமையையும் இதன்மூலம் பெற்றுள்ளார். மேலும் இந்தப் பிரிவில் இந்த விருதை பெற்றுள்ள இளம்பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய விருதுகளாக ஆஸ்கர் உள்ளது. ஆண்டுதோறும் இந்த விருதுகள் அறிவிப்பிற்காக அவர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு தமிழிலிருந்து ஜெய் பீம், கூழாங்கல் உள்ளிட்ட படங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X