»   »  கோவா திரைப்பட விழா நிறைவு - சிறந்த நடிகை விருது பெற்றது யார் தெரியுமா? #IFFI2017

கோவா திரைப்பட விழா நிறைவு - சிறந்த நடிகை விருது பெற்றது யார் தெரியுமா? #IFFI2017

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவா : 48-வது சர்வதேசத் திரைப்படத் திருவிழா கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா இன்றோடு நிறைவடைகிறது.

இந்தத் திரைப்படத் திருவிழா மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. உலகின் முக்கிய திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் நாணா பட்னேகர் உள்ளிட்ட இந்தியத் திரைப் பிரபலங்கள் இந்த விழாவின் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.

கோவா திரைப்பட விழா

சர்வதேச திரைப்பட விழாவின் இறுதிநாளான இன்று சிறந்த படங்களுக்கு விருதளிக்கப்படுகிறது. இறுதி நாள் நிகழ்வை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் மற்றும் ஸாய்ரா வாசிம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

120 பிபிஎம்

ராபின் காம்பில்லோ இயக்கிய பிரெஞ்ச் திரைப்படமான '120 பிபிஎம்' கோல்டன் பீக்காக் விருது பெறுகிறது. இந்த விருதுதான் IFFI திரைப்பட விழாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

சிறந்த நடிகர் விருது

சிறந்த திரப்படத்திற்கான விருதை வென்ற '120 பிபிஎம்' படத்தில் நடித்த நடிகர் நேஹியல் பெரேஸ் பிஸ்கயார்ட் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

பெண் இயக்குநர்

சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதை 'ஏஞ்சல்ஸ் வியர் வொய்ட்' எனும் சீனப் படத்தை இயக்கிய விவியன் க்யூ எனும் பெண் இயக்குநர் பெறுகிறார்.

டேக் ஆஃப்

'டேக் ஆஃப்' மலையாளப் படத்தை இயக்கிய மகேஷ் நாராயனுக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டு வழங்கப்படுகிறது. ஈராக்கில் பணியாற்றும் இந்தியச் செவிலியர் அனுபவிக்கும் துயரக் காட்சிகளைக் கண்முன்னே நிறுத்தும் திரைப்படம். இந்தப் படத்தில் நாயகனாக ஃபஹத் பாசில் நடித்திருக்கிறார்.

நடிகை பார்வதி

சிறந்த நடிகைக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெறுகிறார் மலையாள நடிகை பார்வதி. 'டேக் ஆஃப்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்

இந்த ஆண்டின் மதிப்புமிக்க திரையுலக ஆளுமை விருது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ஸ்மிருதி இராணி, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் வழங்கினர்.

English summary
The 48th International Film Festival which begins on Nov 20th in Goa ends today. The IFFI closing ceremony was hosted by Bollywood director Karan Johar and Zaira Wasim. The French film '120 Bpm' directed by Robin Campillo received Golden Peacock Award. Malayalam actress Parvathi gets Silver Peacock Award for Best Actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil