கோல்டன் குளோப் விருதுகள் 2018: ரோமாவுக்கு 2 ஆனால் கிரீன் புக்கிற்கு மூன்றா?- ரசிகர்கள் அதிருப்தி
நியூயார்க்: கோல்டன் குளோப் விருது விழாவில் கிரீன் புக் படத்திற்கு அதிகபட்சமாக 3 விருதுகள் கிடைத்தது.
ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
76வது கோல்டன் குளோப் விருது விழாவை ஆன்டி சாம்பெர்க், சான்ட்ரா ஓ தொகுத்து வழங்கினார்கள். படங்கள், டிவி சீரிஸ்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஓப்ரா வின்ஃப்ரோ
விருது விழாவுக்கு வந்தவர்கள் கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அப்படி உடை அணிந்திருந்தனர். நிகழ்ச்சியில் ஓப்ரா வின்ஃப்ரே பேசியதை பார்த்தால் அவர் 2020ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் போன்று.

பொஹிமியன் ராப்சோடி
ஃபிரெட்டி மெர்குரியின் வாழ்க்கை வரலாற்று படமான பொஹிமியன் ராப்சோடிக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. சிறந்த படம் , சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்தது. பொஹிமியன் ராப்சோடிக்காக ராமி மலேக்கிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

கிரீன் புக்
கிரீன் புக் படத்திற்கு அதிகபட்சமாக 3 விருதுகள் கிடைத்தது. சிறந்த மியூசிக்கல் அல்லது காமெடி படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர்(மஹர்ஷலா அலி) ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்தது. 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட எ ஸ்டார் இஸ் பார்ன் படத்திற்கு ஒரு விருது தான் கிடைத்தது. (சிறந்த ஒரிஜினல் பாடல்- ஷாலோ)

ரெஜினா
வைஸ் படத்தில் நடித்ததற்காக கிறிஸ்டியன் பேலுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், தி ஒயிஃப் படத்திற்காக கிளென் க்ளோஸுக்கு சிறந்த நடிகைக்காகன கோல்டன் குளோப் விருதும் கிடைத்தது. சிறந்த துணை நடிகைக்கான விருது ரெஜினா கிங்கிற்கு கிடைத்தது.(இப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்).

டக்ளஸ்
சிறந்த டிவி டிராமா விருது தி அமெரிக்கன்ஸுக்கு கிடைத்தது. சிறந்த டிவி டிராமா நடிகர் விருது ரிச்சர்ட் மேடனுக்கும், சிறந்த டிவி டிராமா நடிகை விருது சான்ட்ரா ஓவுக்கும் கிடைத்தது. டிவி காமெடி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மைக்கேல் டக்ளஸுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ரேச்சல் ப்ராஸ்நஹனுக்கும் கிடைத்தது.

ரோமா
சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக ரோமா தேர்வு செய்யப்பட்டது. மோஷன் பிக்சரில் சிறந்த இயக்குனருக்கான விருது ரோமாவை இயக்கிய அல்போன்ஸோ குவாரனுக்கு கிடைத்தது. ரோமா தான் அதிக விருதுகள் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கிரீன் புக் வாங்கியது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











