»   »  ஷாரூக்கான்- கஜோலின் 'தில்வாலே' ... 2015-ன் மோசமான திரைப்படமாக தேர்வு

ஷாரூக்கான்- கஜோலின் 'தில்வாலே' ... 2015-ன் மோசமான திரைப்படமாக தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 2016 ம் ஆண்டு கோல்டன் கேலா விருதுகளில், மோசமான திரைப்படத்திற்கான விருதை ஷாரூக்கான் -கஜோலின் 'தில்வாலே' பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மோசமான இந்தி திரைப்படங்களை தேர்வு செய்து கோல்டன் கேலா என்ற பெயரில், முன்னணி ஊடகம் ஒன்று விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டிற்கான 8 வது கோல்டன் கேலா விருதுகள் நேற்று நடைபெற்றது. கடந்தாண்டின் மோசமான நடிகராக சூரஜ் பஞ்சோலியும்(ஹீரோ), மோசமான நடிகையாக சோனம் கபூரும் (பிரேம் ரத்தன் தான் பாயோ) தேர்வு செய்யப்பட்டனர்.

Golden Kela Awards 2016: 'Dilwale' Won Worst film Award

மோசமான இயக்குநர் விருதை சூரஜ் பர்ஜாத்யா 'பிரேம் ரத்தன் தான் பாயோ' திரைப்படத்திற்காக வென்றார். மோசமான திரைப்படத்திற்கான விருதை 'தில்வாலே' வென்றது.

ஷாரூக்கான், கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இதனால் விநியோகஸ்தர்கள் இப்படத்திற்கு நஷ்டஈடு கேட்டிருந்தனர். இதனை ஏற்று விநியோகஸ்தர்களுக்கு 50% இழப்பீடு வழங்குவதாக ஷாரூக்கான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Golden Kela Awards 2016:Shah Rukh Khan, Kajol Starrer 'Dilwale' Won worst film Award.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil