»   »  கோபிகாவுக்கு பத்மினி விருது

கோபிகாவுக்கு பத்மினி விருது

Subscribe to Oneindia Tamil

அமெரிக்க மலையாளிகள் சங்கம் வழங்கும் பத்மினி ராமச்சந்திரன் விருது இந்த ஆண்டு கோபிகாவுக்குக் கிடைத்துள்ளது.

மறைந்த நடிகை, நாட்டியப் பேரொளி பத்மினியின் பெயரில் ஆண்டுதோறும் அமெரிக்க மலையாளிகள் சங்கம் விருது வழங்கி வருகிறது. சிறந்த பெண் திரைக் கலைஞருக்கான சிறப்பு விருது இது.

திரைத் துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு (மலையாளிகளுக்கு?) இந்த விருதினை வழங்குகின்றனர். இந்த ஆண்டுக்கான விருது கோபிகாவுக்கு கிடைத்துள்ளது.

ஆட்டோகிராப் மூலம் 2005ம் ஆண்டு நடிக்க வந்த கோபிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தற்போது சுந்தர்.சியுடன் வீராப்பு படத்தில் நடித்து வருகிறார்.

Please Wait while comments are loading...