»   »  தேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ

தேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சேகர் கபூர் தலைமையிலான தேர்வுக் குழு பிராந்திய மொழி படங்களின் தரத்தை பார்த்து மிரண்டு போயுள்ளதாம்.

Here is the complete list of national award winners

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்றோரின் விபரம் இதோ,

 • தாதா சாகேப் பால்கே விருது- வினோத் கன்னா
 • சிறந்த நடிகை- ஸ்ரீதேவி (மாம்)
 • சிறந்த நடிகர்- ரித்தி சென்( நகர் கிர்தான்)
 • சிறந்த இயக்குனர்- ஜெயராஜ் (பயானகம்)
 • சிறந்த சண்டை அமைப்பு - பாகுபலி 2
 • சிறந்த நடன இயக்குனர்- கணேஷ் ஆச்சார்யா(டாய்லெட் ஏக் பிரேம் கதா)
 • சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்- பாகுபலி 2
 • நடுவர் விருது- நகர் கிர்தான்
 • சிறந்த பாடலாசிரியர் - ஜெ.எம். பிரஹலாத்(முத்துரத்னா பாடல்)
 • சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை)
 • சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராம் ரஜக்(நகர் கிர்தான்)
 • சிறந்த ஆடை வடிவமைப்பு - கோபிந்தா மந்தல்(நகர் கிர்தான்)
 • சிறந்த கலை இயக்கம் - சந்தோஷ் ராஜன் (டேக் ஆஃப்)
 • சிறந்த எடிட்டிங் - ரீமா தாஸ் ( வில்லேஜ் ராக்ஸ்டார்)
 • சிறந்த சவுண்ட் டிசைன்- வாக்கிங் வித் தி வின்ட்
 • சிறந்த ஆடியோகிராபி- மல்லிகா தாஸ்( வில்லேஜ் ராக்ஸ்டார்)
 • சிறந்த லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிங் - மல்லிகா தாஸ்( வில்லேஜ் ராக்ஸ்டார்)
 • சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்
 • சிறந்த தழுவல் திரைக்கதை - பயானகம்
 • சிறந்த ஒளிப்பதிவு - நிகில் எஸ்.பிரவீன் (பயானகம்)
 • சிறந்த பின்னணி பாடகி - ஷாஷா திருப்பதி( காற்று வெளியிடை)
 • சிறந்த பின்னணி பாடகர் - யேசுதாஸ் (போய் மரைஞ்ய காலம், விஸ்வாசபுரம் மன்சூர்)
 • சிறந்த குழந்தை நட்சத்திரம் - அனிதா தாஸ் ( வில்லேஜ் ராக்ஸ்டார்)
 • சிறந்த குழந்தைகள் படம் - மோர்கியா
 • சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் - இராடா
 • சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான படம் - தப்பா (மராத்தி)
 • அதிகம் கவனம் ஈர்த்த படம் - பாகுபலி 2
 • சிறந்த சமூக திரைப்படம் : ஆலோருக்கம்
 • சிறந்த திரைப்பட விமர்சகர் : கிரிதர் ஜா
 • சிறந்த துணை நடிகர் - ஃபஹத் ஃபாசில்(தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்)
 • சிறந்த துணை நடிகை - திவ்யா தத்தா (இராடா)
 • சிறந்த வசனம் : சம்பித் மோகன்டி (ஹலோ அர்சி)
 • சிறந்த தமிழ்ப் படம் - டு லெட்
 • சிறந்த தெலுங்கு படம் - காஸி
 • சிறந்த மலையாளப் படம் - தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்
 • சிறந்த கன்னட படம் - ஹேபெட்டு ராமக்கா
 • சிறந்த லடாகி படம் - வாக்கிங் வித் தி வின்ட்
 • சிறந்த துலு படம் - படாயி
 • சிறந்த ஒரியா படம் - ஹலோ அர்சி
 • சிறந்த மராத்தி படம் - கச்சா லிம்பு
 • சிறந்த பெங்காளி படம்- மயூராக்ஷி
 • சிறப்பு விருது- பார்வதி( டேக் ஆஃப்)
English summary
65th national awards have been announced on friday. Kollywood has managed to bag just three awards with TOLET as the best Tamil film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X