»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கமல்ஹாசன் தமிழ், இந்தி மொழிகளில் தயாரித்து, நடித்த ஹே ராம் படம், ஆஸ்கர் விருதில்கலந்துகொள்ளும் இந்தியப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இயக்கிய முதல் தமிழ்ப் படம் ஹே ராம். பலவிதமான சர்ச்சைகளுக்குமத்தியில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது ஹே ராம் ஆஸ்கர் விருதுகளில் கலந்து கொள்ளும் இந்தியப் படமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்திய திரைப்பட சம்மேளனம் அமைத்த சிறப்புக் குழு ஹே ராம்படத்தை, ஆஸ்கர் விருதில் கலந்து கொள்ளத் தேர்வு செய்துள்ளது.

தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேயார் தலைமையில் அமைந்ததேர்வுக் குழு ஹே ராம் படத்தை இந்திய என்ட்ரியாகத் தேர்வு செய்தது.

நவம்பர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை மொத்தம் 16 படங்களை இக்குழுவினர்போட்டுப் பார்த்து, இறுதியில், ஹே ராமைத் தேர்வு செய்தனர்.

ஹே ராம் தவிர, பாரதி, சேது, குஷி ஆகிய படங்களும் ஆஸ்கர் விருதில் கலந்துகொள்ளபோட்டியிட்டன. இவை தவிர மலையாளம், இந்தி, தெலுஙகு, குஜராத்தி மொழிப்படங்களும் போட்டியில் இருந்தன.

இதுவரை தமிழிலிருந்து சில தமிழ்ப் படங்களே ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டுப்பிரிவு போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்டுள்ளன. அதில் முதல் படம், தெய்வமகன். சிவாஜி கணேசன் மாறுபட்ட மூன்று கேரக்டர்களில் நடித்திருந்தார். அதன் பிறகுமேலும் ஒரு சிவாஜி படம் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது.

அதன் பின்னர் சென்ற படங்கள் அனைத்தும் கமல்ஹாசன் (ஷங்கரின் ஜீன்ஸ் தவிர)நடித்தவையே. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகியவை கமல் நடித்து, ஆஸ்கருக்குபரிந்துரைக்கப்பட்ட படம். தற்போது ஹே ராம் மூலம் மீண்டும் தனது நடிப்புத் திறமையைபறை சாற்றியுள்ளார் கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil