»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த க ஹோனா பியார் ஹை திரைப்படத்திற்கு பிலிம் பேர்விருது கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டது.

ஹிருத்திக் ரோஷன் நடித்து பல விருதுகளைப் பெற்ற படம் க ஹோனா பியார் ஹை. இந்தப் படத்திற்கு கடந்தமாதம் தான் வீடியோகான் விருது கிடைத்தது.

விருது கிடைத்த சந்தோஷத்தில் திரைப்பட இயக்குநரும், ஹிருத்திக் ரோஷனின் தந்தையுமான ராகேஷ் ரோஷன்கூறுகையில், க ஹோனா பியார் ஹை படத்திற்கு விருது கிடைத்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதுஎனது கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றார்.

மகன் ஹிருத்திக் க்ரோஷனோ விருது கிடைத்த சந்தோஷத்தில் இன்னும் அதிகமான சந்தோஷத்தில் இருக்கிறார்.அவருக்கு சிறந்த புதுமுக நடிகர் மற்றும் சிறந்த நடிகர் என்ற இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. மேலும் கடந்தமாதம் ஸ்கிரீன் வீடியோகான் விருதையும் தட்டிச் சென்றார் ஹிருத்திக் ரோஷன்.

விருது கிடைத்த சந்தோஷத்தில் இருக்கும் ஹிருத்திக் என்ன சொல்கிறார்?

இந்தித் திரைப்பட உலகில் என்னை விட திறமையான நடிகர்கள் இருக்கும் போது எனக்கு விருது கிடைத்ததுஎன்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது என்றார்.

ஹிருத்திக் க்ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் விருது கிடைத்த சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீருடன்கூறுகையில், எனது தந்தை ரோஷன் சிறந்த இசையமைப்பாளர்.

அவர் 1960 ல் தாஜ் மஹால் என்ற படத்திற்கு இசையமைத்து பிலிம்பேர் விருது வாங்கினார். எனது சகோதரர்ராஜேஷ் ரோஷனும் ஜூலி என்ற படத்திற்காக விருது வாங்கியுள்ளார்.

நானும் அதே போல் விருது வாங்க வேண்டும் என்பது எனது அம்மாவின் ஆசை. ஆனால் எனக்கு மட்டும் பிலிம்பேர் விருது கிடைக்கவேயில்லை. கூன் பாரி மாங்க், காத்கார்ஸ் ஆகிய படங்களை இயக்கும் போது விருதுகிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் விருது கிடைக்கவில்லை என்றார்.

1973 ம் ஆண்டு ரிஷி கபூர் நடித்த பாபி திரைப்படத்துக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது. அதற்குப் பிறகு பிலிம்பேர்விருது வாங்குவது ஹிருத்திக் க்ரோஷன்தான்.

தற்போது ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ஃபிசா வெளி வந்துள்ளது. இந்தப் படத்திலும் தனது திறமையைக்காட்டியிருப்பார் ஹிருத்திக் ரோஷன் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விருது பெற்ற மேலும் சிலர் குறித்த விவரம் வருமாறு:

முகபத்தின் படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருதும், நடுத்தர வகுப்பு குடும்பப் பெண் வேடத்தில்அஸ்டிட்வா என்ற படத்தில் நடித்த தபுவுக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டுள்ளது.

ராஜா ஹிந்துஸ்தானி மற்றும் தில் தோ பாகல் ஹை படத்தில் நடித்த பிறகு தற்போது ஃபிசா படத்தில் நடித்ததற்காககரிஷ்மா கபூருக்கு விருது கிடைத்துள்ளது.

ரெஃபியூஜி படத்தில் நடித்த கரிஷ்மா கபூரின் தங்கை கரீனா கபூருக்கு சிறந்த புதுமுக நடிகை விருது கிடைத்துள்ளது.மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹிருத்திக் ரோஷன், அவரது தந்தை ராகேஷ் ரோஷன், ராகேஷ் ரோஷனின்சகோதரர் ராஜேஷ் ரோஷன் ஆகியோருக்கு விருது கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.

ஐ.ஏ.என்.எஸ்.

Read more about: award, film fare, mumbai, roshan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil