»   »  கோலாலம்பூரைக் கலக்கிய ஐஐஎப்ஏ விழா.. விருதுகளை அள்ளிய "ராணியும், ஹைதரும்"!

கோலாலம்பூரைக் கலக்கிய ஐஐஎப்ஏ விழா.. விருதுகளை அள்ளிய "ராணியும், ஹைதரும்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வந்த இந்தியா சர்வதேச திரைப்பட விருதுகள் 2015 திரைப்பட விழா வழக்கம் போல கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

முற்றிலும் இந்திப் படங்கள் மட்டுமே பங்கேற்ற இந்த இந்திப் பட விழாவில் க்வீன் படமும், ஹைதர் படமும் அதிக விருதுகளை அள்ளிச் சென்றன.

சிறந்த திரைப்படமாக க்வீன் தேர்வானது. சிறந்த நடிகராக ஹைதர் பட நாயகன் ஷாஹித் கபூரும், சிறந்த நடிகையாக க்வீன் நாயகி கங்கனா ரனாவத்தும் தேர்வாகினர். சிறந்த இயக்குநராக ஆமிர்கான் நடித் பிகே படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி தேர்வானார்.

16வது விருது விழா

16வது விருது விழா

கோலாலம்பூரில் உள்ள புத்ரா உள்ளரங்கத்தில் ஜூன் 7ம் தேதி தொடங்கியது 16வது இந்தியா சர்வதேச திரைப்பட விருது விழா.

ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்

ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள், திரைப்பட ரிலீஸ்கள், நட்சத்திரங்களின் அணிவகுப்பு என ஹாலிவுட்டை காப்பியடித்து ஏகப்பட்ட ஐட்டங்களை ரசிகர்களுக்குக் காட்டினர் இந்தித் திரையுலக நட்சத்திரங்கள்.

விருதுகள்

விருதுகள்

இறுதியாக விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அதிகம் பேசப்பட்ட க்வீன் படம் எதிர்பார்த்தது போல நிறைய விருதுகளை வாங்கியது. ஹைதர் படமும் கடும் போட்டியைக் கொடுத்தது.

க்வீன்

க்வீன்

க்வீன் படத்தின் நாயகி கங்கனா ரனாவத் சிறந்த நடிகையாக தேர்வானார். அப்படம் சிறந்த படத்துக்கான விருதையும் தட்டிச் சென்றது.

பிகே

பிகே

பிகே படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணிக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. ஹைதர், க்வீன் படங்களும் இந்த விருதுக்குப் போட்டியில் இருந்தன.

சிறந்த நடிகர் ஷாஹித் கபூர்

சிறந்த நடிகர் ஷாஹித் கபூர்

சிறந்த நடிகராக ஹைதர் படத்தில் நடித்த ஷாஹித் கபூர் தேர்வானார். பிகே. நாயகன் ஆமிர்கான், அர்ஜூன் கபூர், ஹிருத்திக் ரோஷன், ஷாருக் கான் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இவர் வென்றுள்ளார்.

சிறந்த நடிகை கங்கனா

சிறந்த நடிகை கங்கனா

சிறந்த நடிகையாக க்வீன் பட நாயகி கங்கனா ரனாவத் தேர்வாகியுள்ளார். இவர் ஆலியா பட், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ராணி முகர்ஜி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி வென்றுள்ளார்.

துணை நடிகர்

துணை நடிகர்

சிறந்த துணை நடிகராக ஜெனீலியாவின் வீட்டுக்காரர் ரித்தேஷ் தேஷ்முக்கும், சிறந்த துணை நடிகையாக தபுவும் தேர்வானார்கள்.

சிறந்த அறிமுகங்கள்

சிறந்த அறிமுகங்கள்

சிறந்த அறிமுக நாயகனாக ஹீரோபன்டி படத்தில் நடித்த டைகர் ஷெராப் தேர்வானார். இவர் ஜாக்கி ஷெராப்பின் மகன் ஆவார். சிறந்த அறிமுக நடிகையாக அதே ஹீரோபன்டி படத்தில் நடித்த கிருத்தி சனோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த காமெடியன்

சிறந்த காமெடியன்

சிறந்த காமெடியனாக மெய்ன் தேரா ஹீரோ படத்தில் நடித்த வருண் தவானும், சிறந்த வில்லனாக ஹைதர் படத்தில் நடித்த கே கே மேனனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த கதை

சிறந்த கதை

சிறந்த கதைக்கான விருது க்வீன் படத்திற்கு கிடைத்தது. சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிக் பட இயக்குநர் சஜித் நாடியத்வாலாவுக்குக் கிடைத்தது.

சிறந்த இசை

சிறந்த இசை

2 ஸ்டேட்ஸ் படத்திற்காக சங்கர் ஈசான் லாய்க்குக் கிடைத்தது. சிறந்த பாடலுக்கான விருது மனோஜ் முன்டஷிர் இயற்றிய கல்லியான் என்ற பாடலுக்குக் கிடைத்தது.

சிறந்த பின்னணிப் பாடகர்

சிறந்த பின்னணிப் பாடகர்

சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது அங்கித் திவாரிக்கும், பாடகிக்கான விருது கனிகா கபூருக்கும் கிடைத்தன.

சிறந்த பின்னணி இசை

சிறந்த பின்னணி இசை

சிறந்த பின்னணி இசைக்கான விருது ஹைதர் படத்துக்காக விஷால் பரத்வாஜுக்கும், சிறந்த சவுன்ட் டிசைனருக்கான விருது ஷாஜித் கோயேரிக்கும் கிடைத்தன.

ஹைதருக்கு 9 - க்வீனுக்கு 5

ஹைதருக்கு 9 - க்வீனுக்கு 5

இந்த விழாவில் அதிகபட்சமாக ஹைதர் படம் 9 விருதுகளைத் தட்டிச் சென்றது. அடுத்து க்வீன் 5 விருதுகளுடன் 2வது இடத்தைப் பிடித்தது. ஏக் வில்லன் 4, கிக் 3, பிகே 2 விருதுகளைப் பெற்றன.

வெறும் இந்தி மட்டுமே

வெறும் இந்தி மட்டுமே

இந்தியா சர்வதேச திரைப்பட விழா என்று பெயர் வைத்திருந்தாலும் கூட இந்த விழாவில் வெறும் இந்திப் படங்கள் மட்டுமே கலந்து கொள்ளும். இந்தி திரையுலகினர் மட்டுமே பங்கேற்பார்கள். இந்த விழாவை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி பகிரங்கமாக கடுமையாக விமர்சித்து ஒருமுறை இந்த விழாவிலேயே பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Vikas Bahl's coming-of-age drama 'Queen' and Vishal Bhardwaj's insurgency movie 'Haider', an adaptation of Shakespeare's 'Hamlet', on Sunday scooped the major trophies at the 16th IIFA awards, including the best actress honour for Kangana Ranaut and the best actor gong for Shahid Kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil