Don't Miss!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் குறைவாக இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- News
"லீக்" ஆன பிளான்.. பாஜக வேட்பாளரை.. ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா.. ஒரே கல்லில் 2 மாங்காய்
- Automobiles
ராயல் என்பீல்டிற்கு மவுசு குறைகிறதா? இதை பார்த்தா அப்படி தான் தெரியுது...
- Finance
தங்க கடன் மட்டும் 1 லட்சம் கோடி.. திடீரென தங்க நகையை அடகு வைக்கும் மக்கள்.. ஏன்..?!
- Technology
OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
IIFA 2022 : சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள்... முழுமையான பட்டியல் !
அபுதாபி : சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா (IIFA 2022 ) அபுதாபியின் யாஸ் தீவில் உள்ள யாஸ் பே வாட்டர்ஃபிரண்டின் ஒரு பகுதியான எதிஹாட் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை சல்மான் கான், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் மணீஷ் பால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில், நடிகர் நடிகைகளான ரன்வீர் சிங், கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான், வருண் தவான், அனன்யா பாண்டே, திவ்யா கோஸ்லா குமார் மற்றும் நோரா பதேஹி உள்ளிட்டோர் சில குறிப்பிட்ட பகுதிகளை தொகுத்து வழங்கினர்.
இந்த நிகழ்வில் விக்கி கௌஷலின் பீரியாடிக் படமான சர்தார் உதம் படம் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் உட்பட மூன்று விருதுகளை வென்றது. இதில், விக்கி மற்றும் கிருத்தி சனோன் ஆகியோருக்கு பச்சை கம்பளத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
மீண்டும்
தலைதூக்கும்
கொரோனா...
நடிகர்
ஷாருக்கானுக்கு
கொரோனா
தொற்று
உறுதி
!
இந்த ஆண்டு IIFA விருதுகளைவென்றவர்களின் முழுமை பட்டியல்
சிறந்த படம் - ஷெர்ஷா
சிறந்த முன்னணி கதாபாத்திர நடிகர் - விக்கி கௌஷல், (சர்தார் உதம் )
சிறந்த முன்னணி கதாபாத்திர நடிகை - கிருதி சனோன் (மிமி)
சிறந்த இயக்குனர் - விஷ்ணு வரதன், (ஷெர்ஷா)
சிறந்த துணை நடிகர் - பங்கஜ் திரிபாதி ( லுடோ)
சிறந்த துணை நடிகை - சாய் தம்ஹங்கர் ( மிமி)
சிறந்த அறிமுக ஆண் - அஹான் ஷெட்டி ( தடாப்)
சிறந்த அறிமுக பெண் - ஷர்வாரி வாக், (பூந்தி அவுர் பாப்லி 2)
சிறந்த பின்னணி பாடகர் - ஜூபின் நௌடியல், (ஷெர்ஷா)
சிறந்த பின்னணிப் பாடகி - அசீஸ் கவுர், (ஷெர்ஷா)
சிறந்த இசை (டை) - ஏ ஆர் ரஹ்மான், அத்ராங்கி ரே, மற்றும் தனிஷ்க் பாக்சி, ஜஸ்லீன் ராயல், ஜாவேத்-மொஹ்சின், விக்ரம் மாண்ட்ரோஸ், பி பிராக், ஜானி, ஷெர்ஷா
சிறந்த பாடல் வரிகள் - கௌசர் முனீர், லெஹ்ரா தோ, 83
சிறந்த ஒரிஜினல் கதை - அனுராக் பாசு, (லுடோ)
கோலாகலமா நடைபெற்ற இந்த விழாவில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஷாஹித் கபூர், அனன்யா பாண்டே, நோரா ஃபதேஹி, நர்கிஸ் ஃபக்ரி, மனைவி மிருதுளாவுடன் பங்கஜ் திரிபாதி, மகள் தியானியுடன் ஃபர்தீன் கான், லாரா தத்தா, பாபி தியோல் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.