twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா, அமிதாப் இன்று தேசிய விருது பெறுகின்றனர்!

    By Sudha
    |

    Ilayaraja and Amitabh
    டெல்லி: இன்று டெல்லியில் நடக்கும் தேசிய விருது வழங்கும் விழாவில் இசைஞானி இளையராஜா, நடிகர் அமிதாப் பச்சன், இயக்குநர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று விருது பெறுகிறார்கள்.

    திரைப்படக் கலைஞர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் வெள்ளிக்கிழமை நடக்கிறது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் விருதுகளை வழங்குகிறார்.

    சிறந்த நடிகருக்கான தேசிய விருது அமிதாப்பச்சனுக்குக் கிடைத்துள்ளது. பா படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.

    ஆமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படம் சிறந்த பிரபலமான படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள மலையாளப் படம் குட்டி ஸ்ரங்க், 5 தேசியவிருதுகளை வென்றுள்ளது. சிறந்த தேசியப் படமாக தேர்வு பெற்றதோடு மட்டுமல்லாமல் சிறந்த பிராந்திய மொழிப் படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார்.

    ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ராவின் டெல்லி 6 படம் நர்கீஸ் தத் விருதைப் பெற்றுள்ளது.

    ஷியாம் பெனகல் இயக்கிய வெல்டன் அப்பா படம் சமூக பிரச்னைகளை கூறும் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.

    ஆர். பால்கி இயக்கிய பா படம் சிறந்த நடிகருக்கான விருதை அமிதாப்பச்சனுக்கு பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த ஹிந்தி படத்துக்கான விருதையும் பெற்றது. மேலும் சிறந்த துணை நடிகை விருது (அருந்ததி நாக்), சிறந்த மேக்-அப் (கிறிஸ்டின் டின்ஸ்லி, டோமினி டில்) விருதுகளையும் அள்ளிச் சென்றது.

    சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை (படம்: தேவ்-டி) அமித் திரிவேதி பெறுகிறார். சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு (படம்: பழஸிராஜா) வழங்கப்படவுள்ளது.

    3 இடியட்ஸ் படத்தில் வரும் 'பேட்டி ஹவா சா தா வோ' பாடலை எழுதிய ஸ்வானந்த் கிர்கிரே சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெறுகிறார்.

    சிறந்த நடிகைக்கான விருதை அனன்யா சாட்டர்ஜி (படம்: அபோஹோமன்) பெறுகிறார். இந்தப் படம் சிறந்த இயக்குநருக்கான விருதை ரிதுபர்ணோ கோஷுக்கு பெற்றுத் தந்தது.

    ஃபாரூக் ஷேக் சிறந்த துணை நடிகருக்கான (படம்: லாகூர்) விருதைப் பெறுகிறார். இந்தப் படம் இந்திரா காந்தி விருதையும் பெற்றுள்ளது.

    சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை ரூபம் இஸ்லாமும், பின்னணி பாடகிக்கான விருதை நீலஞ்சனா சர்க்காரும் பெறுகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X