twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைஞானிக்கு கலாம் விருது

    By Staff
    |

    இசைஞானி இளையராஜாவுக்கு இந்திய சங்கீத அகாடமி விருதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வழங்கினார்.

    குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜா, பாலமுரளி கிருஷ்ணா, ஆஷா போன்ஸ்லே, இந்துஸ்தானி இசைக் கலைஞர் கிரிஜா தேவி உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    இவர்களில் சரோட் கலைஞர் அலி அக்பர் கான் மட்டும் உடல் நலக்குறைவு காரணமாக நேரில் வரவில்லை. மற்ற அனைவரும் நேரில் வந்து விருதைப் பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலாம் பேசுகையில், ராஷ்டிரபதி பவனில் உள்ள முகல் கார்டன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நீரூற்றின் பின்னணியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த யோசிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல, இசையில் சிறந்து விளங்கும் மாணவர்களை கொண்டு, சிறைச்சாலைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் போன்ற இடங்களில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்த ஆலோசித்து வருகிறேன். இதற்காக ரூ.10 லட்சம் செலவில் ஒரு அறக்கட்டளை நிறுவப்படும் என்றார் கலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X