twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    64-வது கிராமி விருதுகள்... விருதை தட்டித் தூக்கிய இந்திய வம்சாவளி பெண்!

    |

    லாஸ் வேகாஸ் : இசை உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது கிராமி விருதுகள். லாஸ் வேகாசில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பங்கேற்று புகைப்படங்களை பகிர்ந்ததை காண முடிந்தது. அவர் தனது மகன் அமீனுடன் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார்.

    கிராமி விருது விழா 2022... மகனுடன் பங்கேற்ற இசைப்புயல்... வைரலாகும் புகைப்படங்கள்! கிராமி விருது விழா 2022... மகனுடன் பங்கேற்ற இசைப்புயல்... வைரலாகும் புகைப்படங்கள்!

    கிராமி விருதுகள் 2022

    கிராமி விருதுகள் 2022

    இசை உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கிராமி விருதுகள் காணப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா இன்றைய தினம் நடைபெற்றது. லாஸ் வேகாசின் எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரேனாவில் இந்த 64வது கிராமி விருதுகள் விழா நடைபெற்றது.

    86 பிரிவுகளில் விருதுகள்

    86 பிரிவுகளில் விருதுகள்

    இந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இதில் இசை ஆல்பங்களில் சிறப்பாக பங்கேற்ற கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 86 பிரிவுகளில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    விருது பெற்ற இந்திய வம்சாவளி பெண்

    விருது பெற்ற இந்திய வம்சாவளி பெண்

    இந்த ஆண்டு நிகழ்ச்சியை ட்ரவர் நோவா தொகுத்து வழங்கினார். இதில் குழந்தைகள் இசை ஆல்பம் கேட்டகிரியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்ணான ஃபல்குனி ஷா விருது பெற்றுள்ளார். கலர்புல் வேர்ல்ட் என்ற ஆல்பத்திற்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

    இன்றைய மேஜிக்

    இன்றைய மேஜிக்

    ஃபாலு என்று அன்பாக அழைக்கப்படும் இவர் இந்த விருது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று நடந்துள்ள இந்த மேஜிக்கை வெளிப்படுத்த தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார். விருதுடன் கூடிய புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இசைப்புயலுடன் பணிபுரிந்த ஃபாலு

    இசைப்புயலுடன் பணிபுரிந்த ஃபாலு

    இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து ஃபாலு பணிபுரிந்துள்ளார். முன்னதாக கடந்த 2018லும் தனது பஜார் என்ற ஆல்பத்திற்காக இவர் கிராமி விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் ஜெய்ப்பூரில் இசைப் பயிற்சி பெற்றுள்ளார். சர்வதேச அளவில் வைகெலப் ஜீன், பிலிப் கிளாஸ், ரிக்கி மார்ட்டின், ப்ளூஸ் ட்ராவலர் மற்றும் யோ யோ மா போன்ற இசையமைப்பாளர்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார்.

    English summary
    Indian Origin girl Falu got Grammy award
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X