twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தந்தைக்காக பாடல்.. 3 விருதுகளை பெற்ற நா.முத்துக்குமார்…விருதைப் பெற்றுக்கொண்ட மகனும், மகளும்

    |

    சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா நேற்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

    2009 முதல் 2014 வரையிலான தேர்வு செய்யப்பட்ட நடிகர்களுக்கும் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

    தமிழ்நாடு அரசின் இந்த விருதுகள் வழங்கும் விழாவில் பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு பதிலாக அவரது மகனும் மகளும் விருதுப் பெற்றனர்.

    தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.. 2009 முதல் 2014 வரை யாருக்கெல்லாம் விருது.. மொத்த லிஸ்ட் இதோ!தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.. 2009 முதல் 2014 வரை யாருக்கெல்லாம் விருது.. மொத்த லிஸ்ட் இதோ!

    தமிழ்நாடு திரைப்பட விருது விழா

    தமிழ்நாடு திரைப்பட விருது விழா

    சிறந்த திரைப்படங்கள், நடிகர்களுக்கான விருதுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று வழங்கப்பட்டன, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், நடிகர்கள், சின்ன திரை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 2009 முதல் 2014ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர்கள் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த், நாசர், சமுத்திரக்கனி, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி, சங்கீதா, இயக்குநர்கள் லிங்குசாமி, பாண்டிராஜ், வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றனர்.

    நா முத்துக்குமாருக்கு 3 விருதுகள்

    நா முத்துக்குமாருக்கு 3 விருதுகள்

    இந்த திரைப்பட விருதுகள் விழாவில் மறைந்த பாடலாசிரியர் கவிஞர் நா முத்துக்குமாருக்கு 3 விருதுகள் கிடைத்தன. நவீனமான வரிகளில் இந்த இசை சமூகத்துக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை தனது பேனாக்களால் சமைத்து பறிமாறிச் சென்ற மகத்தான கவிஞன் நா முத்துக்குமார். யுவன் சங்கர் ராஜா - நா முத்துக்குமார் கூட்டணி தமிழ் திரையுலகிற்கு செய்த இசைத் தொண்டுகளை அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது.

    பட்டாம்பூச்சிகளின் கவி காதலன்

    பட்டாம்பூச்சிகளின் கவி காதலன்

    காதலுக்கும் காமத்துக்கும் இடையேயான நுட்பமான உளவியல் எல்லைக் கோட்டை, தனது வரிகளால் விவரித்துக் காட்டியதில் நா முத்துக்குமாருக்கு இணை யாரும் இங்கில்லை. 'ஆனந்த யாழை' மீட்டுகிறாள் என்றப் பாடல் வெறும் இசைக்கான வரிகளாக மட்டுமில்லாமல், தந்தைக்கும் மகளுக்குமான உறவின் ஆன்மாவையும் அதன் உள்ளடுக்குகளையும் மெட்டவிழ்த்து நின்றது. மனித உறவுகளின் அத்தனை சாரம்சங்களும் நா முத்துக்குமாரின் பாடல்களில் இருந்தன.

    காற்றில் கரைந்த திரையிசைக் கவி

    காற்றில் கரைந்த திரையிசைக் கவி

    இந்நிலையில், காலத்தின் கொடுமைக்கு இந்த தமிழ்ச் சமூகத்தை தவியாய் தவிக்கவிட்டு காற்றில் கரைந்துப் போனார் நா முத்துக்குமார் என்றொரு நவீன திரையிசைக் கவி. ஆனால், அவர் எழுதிய பாடல்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன. 2012, 2013, 2014 ஆகிய வருடங்களுக்கான சிறந்த பாடலாசிரியராக நா முத்துக்குமார் தேர்வாகியிருந்தார்.

    தந்தைக்காக விருது வாங்கிய மகன், மகள்

    தந்தைக்காக விருது வாங்கிய மகன், மகள்

    தங்க மீன்கள், சைவம் உள்ளிட்ட படங்களுக்காக வழங்கப்பட்ட இந்த விருதுகளை, நா முத்துக்குமாரின் மகனும் மகளும் இணைந்து பெற்றுக்கொண்டனர். 'தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும்' என, தந்தைக்காக பாட்டெழுதி ரசிகர்களை கண்ணிர் சிந்த வைத்த நா முத்துக்குமாரின் விருதுகளை, அவரது மகனும் மகளும் வாங்கிச் சென்றது உருக்கமாக அமைந்தது.

    English summary
    Lyricist Na Na Muthukumar won 3 awards at the Tamil Nadu Government Film Awards. As he is no longer alive, Muthukumar's son and daughter received the award instead
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X