»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.

கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் இந்த விருதுஆணடுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2001, 2002ம் ஆண்டில் கலைமாமணி விருது பெறுவோர் பட்டியலை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில் 2003 மற்றும் கடந்த இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து இந்த விருது பெறுவோரின் 91 பேர் கொண்டபட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

2001ம் ஆண்டுக்கான விருது பெறுவோர்: நடிகர்கள் முரளி, குண்டுகல்யாணம், நடிகை ரேகா, இசையமைப்பாளர்புகழேந்தி, பின்ணணி பாடகி கோமளா. கவிஞர் குருசாமி மற்றும் பரதநாட்டிய, கர்நாடக இசைக் கலைஞர்கள்.

2002ம் ஆண்டுக்கான விருது பெறுவோர்: நடிகை விஜயசாந்தி, நடிகர்கள் வினுச்சக்கரவர்த்தி, கவுண்டமணி,செந்தில், இயக்குனர் வசந்த். கவிஞர் பொன்னடியான் உள்ளிட்டோர்.

2003ம் ஆண்டுக்கான விருது பெறுவோர்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விவேக், நடிகை சிம்ரன், கனகா உள்ளிட்டோர்.

இந்த விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வரும் நவம்பர் 14ம் தேதி சென்னையில் வழங்குவார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil