»   »  கமலுக்கு 17ம் தேதி டாக்டர் பட்டம்

கமலுக்கு 17ம் தேதி டாக்டர் பட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிசம்பர் 04, 2004

கமலுக்கு 17ம் தேதி டாக்டர் பட்டம்


நடிகர் கமல்ஹாசனுக்கு, அவரது கலைச் சேவையைப் பாராட்டி சென்னை சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 17ம் தேதிகெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ளது சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகம். முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும்,எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவருமான ஜேப்பியார் இந்தக் கல்லூயிரின் வேந்தராக உள்ளார்.

கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேப்பியார், கமல்ஹாசனுக்கு தங்களது பல்கலைக்கழகம் சார்பில் கெளரவர டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து வரும் 17ம் தேதி கமல்ஹாசனுக்கு டாக்டர்பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திரையுலகில் பல ஆண்டுகளாக கதை, வசனம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதைப் பாராட்டியும்,கலைச் சேவையை பாராட்டியும் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil