»   »  கமல் ஹாஸனுக்கு ஹென்றி லாங்லாய்ஸ் விருது!

கமல் ஹாஸனுக்கு ஹென்றி லாங்லாய்ஸ் விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல் ஹாஸனுக்கு பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவுக்கு கமல் ஹாஸன் செய்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருதுக் குழு அறிவித்துள்ளது.

முன்னதாக கமல் ஹாஸனை பிரான்சுக்கான இந்திய தூதர் மோகன் குமார் வரவேற்றார்.

Kamal Hassan conferred henri langlois award

ஹென்றி லாங்லாய்ஸ் பிரான்சின் புகழ்பெற்ற சினிமா வரலாற்றாசிரியர். திரைப்பட ஆவணத் தொகுப்பாளர். 1977-ம் ஆண்டு மரணமடைந்த இவரது பெயரில் சினிமா சாதனையாளர்களுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது குறித்து கமல் ஹாஸன் கூறுகையில், "பாரிஸில் ஹென்றி லாங்லாய்ஸ் விருது பெற்றேன். இதனைப் பார்க்க என் குரு அனந்து சார் இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்தான் ஹென்றி லாங்லாய்ஸ் என்ற பெயரையே எனக்கு அறிமுகப்படுத்தியவர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actor Kamal Haasan has been conferred with henri langlois award in France for his outstanding contribution to Indian cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil