»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அக்டோபர் 9 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கமல் சிறப்புவிருந்தினராக கலந்து கொள்ள கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழாவினை துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி துவக்கி வைக்கிறார்.

இந்தத் திரைப்பட விழாவில் கமல் நடித்த அன்பே சிவம், விக்ரம் நடித்த சாமி, அம்சன் குமார் இயக்கிய ஒருத்திஆகிய படங்களும் போட்டியில் பங்கேற்கின்றன. மேலும் தூள், ரன் ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளன.

40 நாடுகளில் இருந்து 55 படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன. இந்தியாவில் இருந்து 18 திரைப்படங்களும்,13 டாக்குமெண்டரிகளும் போட்டியில் பங்கேற்கின்றன.

இயக்குனர் சேதுமாதவனுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் அவர் இயக்கிய மறுபக்கம், நம்மவர் உள்பட 5படங்கள் இவ் விழாவில் திரையிடப்பட உள்ளன.

டாக்குமெண்டரி பிரிவில் தமிழில் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கிய பரமபதம் என்ற படம் இடம் பெறுகிறது.

இந்தத் திரைப்பட விழாவில் ஆசிய நாடுகளிலிருந்து பங்கேற்கும் திரைப்படங்களில் விருதுக்கு தகுதி பெறும்படங்களைத் தேர்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த கெளதமன், பாஸ்கரன் உள்ளிட்ட 5 பேர் நடுவர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு பெறும் சிறந்த திரைப்படத்துக்கு தங்கமயில் விருதும், மிகச் சிறந்த வளரும் ஆசிய இயக்குனராகத் தேர்வுபெறும் இயக்குனரின் படத்துக்கு வெள்ளிமயில் விருதும் வழங்கப்படவுள்ளன. தங்க மயில் விருதுடன் ரூ. 5லட்சமும், வெள்ளி மயில் விருதுடன் ரூ. 2.5 லட்சமும் பரிசாககத் தரப்படும்.

திரைப்பட விழாவை ஒட்டி கருத்தரங்குகள், விவாத மன்றங்களும் நடக்கின்றன. சினிமாவில் இலக்கியம் என்றதலைப்பில் நடக்கும் பட்டிமன்றத்தில் எழுத்தாளர் சிவசங்கரி பங்கேற்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil