»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

34வது சர்வதேச திரைப்பட விழா டெல்லியில் நேற்றிரவு தொடங்கியது. துணைப் பிரதமர் அத்வானி துவக்கிவைத்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொணடார்.


திரைப்பட விழாவைத் துவக்கி வைத்த கமல். உடன் இந்தி நடிகை கரீனா கபூர்
கமல் பேசுகையில், நான் இங்கே நீண்ட உரையாற்றப் போவதில்லை. அதன் மூலம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களின்மூளைக்குப் போகும் ஆக்ஸிஜனைக் குறைத்து, கொட்டாவி விட வைக்க நான் விரும்பவில்லை. இங்குவந்திருப்பவர்கள் நல்ல படம் பார்க்க வந்திருக்கிறார்கள்.

சினிமா தொழிலை நசியச் செய்து வரும் திருட்டு விசிடியை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கவேண்டும்.

சினிமாவில் முதலீடு செய்ய வர்த்தக நிதியமைப்புகள் முன் வர வேண்டும். இதன் மூலம் தான் இந்திசினிமாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாதா கும்பல்களிடம் இருந்தும், கந்து வட்டிக் கும்பல்களிடம்இருந்தும் சினிமாவை விடுவிக்க முடியும் என்றார்.

அடுத்துப் பேசிய அத்வானி, கமல் சொல்லிவிட்டார். இதனால் நானும் ரொம்ப நீளமாகப் பேச மாட்டேன்.

திருட்டுவிசிடியை ஒழிக்க போலீசாரால் மட்டும் முடியாது. அதற்கு ரசிகர்களின் ஆதரவும் வேண்டும்.

திருட்டு விசிடிக்கு எதிராக சட்டம் கொண்டு வர மத்திய அரசு தயார். ஆனால், முதலில் திருட்டு விசிடியை ஒழிக்கஎன்னவெல்லாம் செய்யலாம் என்ற ஆலோசனைகளை முதலில் அரசுக்கு சினிமாக்காரர்கள் வழங்க வேண்டும்.


விழாவில் துணைப் பிரதமர் அத்வானியுடன் கரீனா
இந்த விழாவில் தூள், ரன், அன்பே சிவம் ஆகிய தமிழ்ப் படங்கள் உள்பட 215 இந்திய, வெளிநாட்டுப் படங்கள்திரையிடப்படவுள்ளன.நான் பத்திரிக்கை நிருபராக இருந்தபோது 1961, 1965ம் ஆணடுகளில் டெல்லியில் நடந்த சர்வதேச திரைப்படவிழாக்கள் குறித்து செய்தி சேகரிக்க வந்திருக்கிறேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil