Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 4 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 5 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது?
சென்னை: உலகின் முதல் தொண்டு படம் கானல் நீர் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகிறது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் எம்.பத்மகுமாரின் கானல் நீர் திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட உள்ளது.
இந்த படம் சல சலப்பான ஒரு நகரத்தில் வீடற்ற ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டங்களை சித்தரிக்கும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்களின் இதயங்களை வென்றுள்ளது.

முக்கிய கதாபாத்திரத்தில் வெயில் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நாயர் நடிக்கிறார். நடிகர் ஹரீஷ் பேராடியும் (ஆண்டவன் கட்டளை புகழ்) இந்த படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை மற்றும் சோஹன் ராய் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் உலகின் முதல் தொண்டுக்கான படம் மற்றும் CSR படங்கள் பிரிவின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த படங்களுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்படுவதற்கும் போட்டியிடுகிறது.
அதாவது இத் திரைப்படத்தின் முழுமையான லாபமும் நிலமற்ற மக்களின் மறுவாழ்வுக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.
இந்தியாவின் கொச்சியில் ஒரு பாலத்தின் கீழ் தங்க வாழும் ஒரு குடும்பத்தைப் பற்றி மிகவும் பிரபலமான ஒரு இந்திய நாளிதழில் எழுதப் பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது கானல் நீர். நிலமற்ற மக்கள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்காக, நகரவாசிகளிடமிருந்து தங்கள் பெண்களைப் பாதுகாக்க தங்குமிடங்களைத் தேடுகின்றனர். இந்த திரைப்படம் நாட்டில் நடக்கும் நிலப் போராட்டங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, இது அதிகாரிகளின் புறக்கணிக்கப்பையும், இந்தியாவில் நிலவும் சிவப்பு-தட்டுப்பாட்டையும், தேவைப்படுபவர்களுக்கு ஒரு உதவியை வழங்க அதிகாரத்துவம் தவறியதையும் பிரதிபலிக்கிறது.
இந்த திரைப்படம் பல சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.
மொத்தத்தில் கமர்சியல் படங்களுக்கான எந்த வரையறையும் இல்லாமல் புதிய முயற்சியாக எடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே 1961 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் கானல் நீர் என்ற தலைப்பில் திரைப்படங்கள் எடுக்கப் பட்டுள்ளன. இது மூன்றாவது முறையாக கானல் நீர் என பெயரிட்டு முதல் ஆஸ்காரை பெற்று தருமா என பார்ப்போம்.