»   »  மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டத்தை வென்றார் மும்பையின் கனிஷ்தா

மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டத்தை வென்றார் மும்பையின் கனிஷ்தா

By Sudha
Subscribe to Oneindia Tamil
Kanishtha Dhankhar
மும்பையில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் பேன்டலூன்ஸ் பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2011 பட்டத்தை வென்றார் மும்பையின் கனிஷ்தா தன்கர். அதேபோல மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் மும்பையைச் சேர்ந்த அழகி அங்கிதா ஷெராய். டெல்லியைச் சேர்ந்த ஹஸ்லீன் கெளர், மிஸ் இந்தியா எர்த் பட்டத்தைப் பெற்றார்.

மும்பையின் மெகபூப் ஸ்டூடியோவில் இந்த கோலாகல விழா நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியின்போது கனிஷ்தாவிடம் கேட்கப்பட்ட கேள்வி - தாயார்களிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கும். ஆனால் குழந்தைகளிடமிருந்து தாய்மார்கள் என்ன கற்றுக் கொள்கிறார்கள்?. இதற்கு கனிஷ்தா அளித்த பதில் - தாய்மார்களிடமிருந்து குழந்தைகள் மட்டுமல்ல, குழந்தைகளும் கூட தாய்மார்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். இப்போது உள்ள இந்தியா பரஸ்பர பரிமாற்றங்களைக் கொண்டது. இங்கு ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்கிறார்கள். தாய்மார்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வது மட்டுமல்ல, நாமும் கூட அவர்களுக்கு நிறைய கற்றுத் தர முடியும் என்றார்.

கனிஷ்தாவுக்கு கடந்த ஆண்டின் மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்ற மனஸ்வி மம்காய் பட்டம் சூட்டினார். வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்கோடா பேபியா கார் பரிசாக அளிக்கப்பட்டது.

20 பேர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர். நிகழ்ச்சியை மனீஷ் பால் மற்றும் சோனு சூத் தொகுத்து அளித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகிகள், தமிழகத்தின் ஆர்எம்கேவி நிறுவன பட்டுச் சேலைகளை அணிந்து அணிவகுத்து வந்தது காணக் கண் கொள்ளாததாக இருந்தது.

இறுதிப் போட்டியில் வென்ற மற்றவர்கள் விவரம்:

பெமினா மிஸ் டேலன்ட்டட் - ராகுல்ப்ரீத் சிங்
பெமினி மிஸ் டிஜிட்டல் தேவதை - தீபிகா பாஜ்வா
ஆர்எம்கேவி பெமினா மிஸ் போட்டோஜெனிக் - டயானா எரப்பா
பெமினா மிஸ் டிவைன் தாட்ஸ் - சுரபி ராவ்
நோவோடெல் பெமினா மிஸ் கான்ஜெலிட்டி - அதிதி மிஸ்ரா
பெமினா மிஸ் வாட்டர் பேபி - கனிஷ்தா தன்கர்
பெமினா மிஸ் அயர்ன் மெய்டன் - அஸ்மிதா சூத்
டிஸ்ஸாட் பெமினா மிஸ் பெர்பெக்ட் டைம் - அஸ்மிதா சூத்
மிஸ் அழகிய கால்கள் - கனிஷ்தா தன்கர்
மிஸ்அழகிய முகம்- ராகுல்ப்ரீதா சிங்
மிஸ் அழகிய உடல்- கனிஷ்தா தன்கர்
மிஸ் ரேம்ப் மாடல் - கனிஷ்தா தன்கர்
மிஸ் நோ மார்க்ஸ் - கனிஷ்தா தன்கர்
மிஸ் ரேடியன்ட் ஸ்கின் - பூர்வா ரானா
மிஸ் அழகிய புன்னகை - ராகுல்ப்ரீதா சிங்
மிஸ் அழகிய கண்கள் - ராகுல்ப்ரீதா சிங்
மிஸ் அழகிய உதடுகள் - அங்கிதா ஷெராய்
மிஸ் அழகிய தலைமுடி - அபராஜிதா சர்மா
மிஸ் டிரெடிஷனல் - அங்கிதா மொஹபாத்ரா
மிஸ் விவேஷியஸ் - அபராஜிதா சர்மா

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The winners of the Pantaloons Femina Miss India (PFMI) 2011 pageant were declared at a star-studded event at Mumbai's Mehboob Studio. PFMI World Kanishtha Dhankhar and PFMI International Ankita Shorey are both from Mumbai. Delhi's Hasleen Kaur was crowned PFMI Earth. The PFMI 2011 winners were crowned by PFMI World 2010 Manasvi Mamgai, Miss Earth 2010 and PFMI Earth 2010 Nicole Faria and PFMI International 2010 Neha Hinge. Tarun Jha, head of marketing, Skoda Auto India, handed the winners the keys of the Skoda Fabia as their grand prize.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more