Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு
பெங்களூரு : கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் ஆவார்.கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் கடந்த அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் காலமானார்.
அப்பு என்று அன்புடன் அழைக்கப்படும் புனித், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி நெறியாளர் என பல திறமைகளையும் கொண்டவர்.இளம் வயதில் புனித் ராஜ்குமார் காலமானது கன்னடம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு கோலிவுட் முன்னணி நடிகர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 1ம் தேதி புனித் ராஜ் குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.அரசு மரியாதையுடன் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
“அப்பு“
என்
சிந்தனையே
முடங்கி
உள்ளது…
புனித்
ராஜ்குமாரை
நினைத்து
உருகிய
பிரபலங்கள்
!
கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1 ம் தேதி நடைபெறும் விழாவில் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள புனித் ராஜ்குமார், 29 படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகின் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இது அவரது ரசிகர்களை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியது.

புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவரது மறைவிற்கு பிறகு ரிலீசான முதல் படம் இதுவாகும். கடைசியாக புனித் ராஜ்குமார் நடித்த லக்கி மேன், Gandhada Gudi ஆகிய இரண்டு படங்கள் பாதியிலேயே நிற்கின்றன.
இதில் லக்கி மேன் படத்தில் புனித் ராஜ்குமார் கடவுள் ரோலில் நடித்து வந்தார். Gandhada Gudi படத்தில், நடிகர் புனித்ராஜ்குமார் ரோலிலேயே நடித்தார்.இந்த படங்களும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழுவதுமாக முடிக்கப்பட்டு, விரைவில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.