»   »  ரஜினி, கமலுக்கு விருது

ரஜினி, கமலுக்கு விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சென்னையில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி விருது வழங்கினார்.

Click here for more images

2005 மற்றும் 22006ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. பெரும் திரளான திரையுலகக் கலைஞர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர்.

2005ம் ஆண்டுக்கான சிறந்த விருதை ரஜினிகாந்த்திற்கும், 2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை கமல்ஹாசனுக்கும் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கும், சிறந்த நடிகர் சிறப்பு விருது விஜய், சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது மீரா ஜாஸ்மினுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த குணச்சித்திர விருதை ராஜ்கிரண், சிறந்த குணச்சித்திர நடிகை விருதை கலைராணியும், சிறந்த வில்லன் விருதை பிரகாஷ் ராஜும், சிறந்த காமெடியன் விருதை விவேக்கும் பெற்றனர்.

சிறந்த இயக்குநர் விருது ஷங்கருக்கும், கதாசிரியருக்கான விருது கரு. பழனியப்பனுக்கும், எடிட்டருக்கான விருது அந்தோணிக்கும், கலை இயக்குநருக்கான விருது தோட்டா தரணிக்கும், சண்டைப் பயிற்சியாளருக்கான விருது கணல் கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.

2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை கமல்ஹாசனும், நடிகைக்கான விருதை ப்ரியா மணியும், சிறந்த நடிகர் சிறப்பு விருது கார்த்தி மற்றும் குள்ள நடிகர் பக்ரூவும் பெற்றனர். சிறந்த நடிகை சிறப்பு விருதை சந்தியா பெற்றார்.

குணச்சித்திர நடிகர் விருதை நாசரும், நடிகை விருதை சரண்யாவும், வில்லன் நடிகர் விருதை பசுபதியும், காமெடியன் விருதை வடிவேலுவும் பெற்றனர்.

சிறந்த இயக்குநர் விருது திருமுருகன், கதாசிரியர் விருது பேரரசு, வசனகர்த்தா விருது சீமான், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பின்னணிப் பாடகர் மது பாலகிருஷ்ணன், பாடகி ஷ்ரேயா கோஷல் ஆகியோர் பெற்றனர்.

2005ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது சந்திரமுகி மற்றும் கஜினிக்கும், 2ம் பரிசு அந்நியனுக்கும், 3ம் பரிசு தவமாய் தவமிருந்து படத்திற்கும் கிடைத்தன. சிறப்புப் பரிசு ப்ரிய சகிக்கும், பெண்களைப் பற்றிய உயர்வான படத்திற்கான விருது கஸ்தூரி மானுக்கும் கிடைத்தது.

2006ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது வெயில் படத்திற்கு வழங்கப்பட்டது. 2ம் பரிசு பருத்தி வீரன், 3ம் பரிசு திருட்டுப் பயலே மற்றும் சிறப்புப் பரிசு இலக்கணத்திற்குக் கிடைத்தது. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான பரிசு காதலே என் காதலே படத்திற்குக் கிடைத்தது.

2006ம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

அதன்படி அறிஞர் அண்ணா விருது ராம. நாராயணனுக்கும், கலைவாணர் விருது விவேக்குக்கும், ராஜா சாண்டோ விருது இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் தாமரைக்கும், எம்.ஜிஆர். விருது அஜீத்திற்கும் வழங்கப்பட்டது.

சிவாஜி கணேசன் விருது விக்ரமுக்கும், கவிஞர் கண்ணதாசன் விருது பா.விஜய்க்கும், தியகாராஜ பாகவதர் விருது டி.எம். செளந்தரராஜனுக்கும் வழங்கப்பட்டது.

முன்னதாக நமீதா, நிலா, மாளவிகா, வடிவேலு, விவேக் ஆகியோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil