twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜரிஷி கே. பாலச்சந்தர் 41 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு, ராஜ் டிவி சார்பில் சென்னையில் பாராட்டுவிழா நடந்தது. அத்தோடு உழைப்பால் உயர்ந்த மாமேதை என்ற விருதும் வழங்கப்பட்டது.நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இந் நிகழ்ச்சியில், பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,நாகேஷ், சிவக்குமார், விவேக் ஆகியோரும்நடிகைகள் மனோரமா, கீதா, சுமித்ரா, அம்பிகா, இயக்குனர்கள் பாரதிராஜா, பார்த்திபன், எஸ்.பி.முத்துராமன், வசந்த், சரண், ஹரி,தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், ஆர்.பி.செளத்ரி, எடிட்டர் மோகன், கவிஞர் வாலி, எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பூரண கும்ப மரியாதையுடன் விழா மேடைக்கு கே.பாலச்சந்தர் அழைத்து வரப்பட்டார்.கே.பிக்கு இரு பக்கமும் ரஜினியும் கமலும் அமர்ந்திருந்தனர். இருவரது கைகளையும் பிடித்தபடியே உணர்ச்சிப் பிரவாகமாய்அமர்ந்திருந்தார் கே.பி.நிகழ்ச்சியில் நடிகைகள் கிரண், மாளவிகா, ரம்பா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.பின்னர் கமல்ஹாசன் பேசுகையில்,இந்த நாள், ஜெமினி மாமாவிற்கும் நன்றி சொல்லும் நாள். வெள்ளிவிழா படப்பிடிப்பு அரங்கில் என்னை கே.பாலச்சந்தரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியது அவர்தான்.அறிமுகப்படுத்திய ஒரே வாரத்தில், பாலச்சந்தர் அவர்களுக்கு கடுமையான மாரடைப்பு. பிழைப்பது கடினம் என்று கூட சில பத்திரிக்கைகள்செய்தி வெளியிட்டன. நல்ல தமிழ் சினிமாவின் ரசிகன் என்ற முறையில் அவர் நலம் பெற வேண்டும் என்று நானும் சின்னதாக வேண்டிக்கொண்டேன்.அன்று எனக்குத் தெரியாது, என் வண்ணமிகு எதிர்காலத்தின் ஆதி ஜோதி ஆஸ்பத்திரியில் கிடக்கிறதென்று. தெரிந்திருந்தால், வாசலிலேயேதவமாய் கிடந்திருப்பேன்.அணையாமல் என் ஜோதி துளிர்த்தெழுந்து பிரகாசித்து எனக்கு விடியல் வந்து விட்ட சேதியை வீடு தேடி ஆள் மூலம் அனுப்பி வைத்தது.மறைந்த நண்பர் ராமுடு எனும் ராமு, பாலச்சந்தர் என்னை பார்க்க விரும்புகிறார் என்ற சேதியுடன் வந்தார்.அங்கு துவங்கிய உறவு, இந்த மேடையில் என்னை அவரின் மூத்த பிள்ளையாக நிறுத்தியிருக்கிறது. தமிழ் திரையலகின் இரண்டு இல்லங்கள்என்னை அவர்களது மூத்த மகனாக தத்தெடுத்திருக்கிறது. ஒன்று அன்னை இல்லம், இன்னொரு கே.பாலச்சந்தரின் இல்லம், அதுஅப்பனில்லம்.திரையுலகில் நான் எனது பெயருக்கு முன் போட்டுக் கொள்ளும் இனிஷியல் இந்த அப்பாவின் இல்லத்திலிருந்து வந்ததுதான்.நான் தைரியம் பழகியது, ரெளத்திரம் பழகியது, தொழில் ஒழுக்கம், நேர்மை பழகியது எல்லாம் அவரது நிழலில். சிவாஜி என்னும்துரோனருக்கு நான் ஏகலைவன் என்றால் கே.பாலச்சந்தர் என்ற துரோணருக்கு நான் அர்ஜூனன்.பாலச்சந்தர் அய்யா அதிகம் கோபப்படுவார். ஆனால் அவரது கோபம் எல்லாம் மருந்து மாதிரி. மருந்து புண்ணில் போடும்போது எரியும்,ஆனால் புண்ணை ஆற்றி விடும். பின்னர் காற்றோடு கலந்து விடும். அப்படித்தான் எனது பல காயங்கள் மாயமாகியுள்ளன.அரசாங்க ஊழியராக அவர் இருந்த நாட்கள், தமிழ் சினிமாவுக்கு இழப்பு, அவர் இங்கு முழுவதுமாக வர தீர்மானித்த நாள் தமிழ்சினிமாவின் பொன் நாள்.அவருக்கு ரோட்டரி சங்கமும், ராஜ் டிவியும் பாராட்டு விழா நடத்தியிருக்கின்றன. அதற்கு நன்றி. அவர்கள் முந்திக் கொண்டு விட்டார்கள்.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய 61 முகங்களில் ஏதாவது சில முகங்கள் சேர்ந்து இந்த விழாவை நடத்தியிருக்க வேண்டும்.பரவாயில்லை, எங்களுக்கும் விழா எடுக்க பாலச்சந்தர் அய்யா வாய்ப்பளிப்பார் என்று நம்புகிறோம் என்றார் கமல்.ரஜினி பேசுகையில், கொஞ்சம் திறமை இருந்தாலே போதும். நீங்கள் கே.பாலசந்தரை சந்தித்து, அவர் மனசு வைத்தார், நீங்கள் இந்தஅரங்கில் முன் வரிசையில் உட்கார முடியும். அது தான் கே.பியின் மாஜிக் டச்.ஒரு விழாவில் கவிஞர் வாலி சொன்னார். நான் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன் சோற்றுக்கு அலைந்தேன். அவரை சந்தித்த பிறகுசோறு சாப்பிட நேரமில்லை என்று. அதே மாதிரி தான் நானும். வாழ்க்கைய பார்த்து பயந்தவன் இந்த சிவாஜி ராவ். என் பெயரை ரஜினிஎன்று கே.பி. சார் மாத்தின பிறகு வாழ்க்கை என்னைப் பார்த்து பயந்தது.இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன், கொடிய விலங்குகள் உலவும் காட்டில் வசித்து வந்த ஒரு மகானைப் பார்த்துக்கேட்டார். எப்படி கொடிய விலங்குகளுடன் நீங்கள் இங்கு வாழ முடிகிறது என்று.3 ஒழுக்கங்கள்தான் அதற்கு காரணம் என்று மகான் பதிலளித்தார். என்ன அந்த ஒழுக்கங்கள் என்று ராதாகிருஷ்ணன் கேட்டார். அதற்கு அந்தமகான், உடல் ஒழுக்கம், அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் மற்றும் நாட்டுக்கும் செய்ய வேண்டிய கடமை, எந்த மதத்தில் பிறந்தாயோஅந்த மதத்தில் சடங்குகளை முறையாக செய்ய வேண்டியது ஆகியவைதான் அவை என்றார் அந்த மகான்.பாலச்சந்தர், நாடகம் என்ற தாய் வீட்டை விட்டு சினிமா என்ற மாமியார் வீட்டுக்குப் போய் விட்டார். அவர் மீண்டும் தாய் வீட்டுக்குத்திரும்ப வேண்டும். அதற்காக மாமியார் வீட்டை மறந்து விடுமாறு நான் கூறவில்லை.அவர் மீண்டும் நாடக சபா ஒன்றைத் தொடங்க வேண்டும். நாடகங்கள் தயாரிக்க வேண்டும். அதில் நானும் நடிக்கத் தயாராக உள்ளேன்.கமல்சாரும் நடிப்பார் என்று நம்புகிறேன். இன்னும் சிலரும் கூட நடிக்க வரலாம். அதன் மூலம் நாடகத்துக்கு புதுவாழ்வு கிடைக்கும் என்றார்ரஜினி. எனவே இதுகுறித்து அவர் ஆலோசிக்க வேண்டும்.நிகழ்ச்சியில் பாலச்சந்தருக்கு கமலும், ரஜினியும் சேர்ந்து ராஜ் டிவி விருதை வழங்கினார்கள். பாலசந்தர் குறித்த ஒரு குறும்படமும்திரையிடப்பட்டது.விழா நடந்து கொண்டிருந்தபோது, வண்ணக் காகிதங்களை உமிழும் பேப்பர் பாம் வெடித்ததில் மேடையில் தீப் பிடித்துக் கொண்டது.மேடையில் கே.பி., ரஜினி, கமல் ஆகியோர் ஏறியபோது இந்த பேப்பர் பாம்கள் உடைக்கப்பட்டன.அப்போது வண்ணக் காகிதங்கள் மேலிருந்து பொழிந்தன. இதில் சில காகிதங்கள் விளக்குகளில் பட்டு தீப் பிடித்துக் கொண்டன. மேடையில்தீ பிடித்தததால் பரபரப்பு ஏற்பட்டுவிட, காவலர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    By Staff
    |
    41 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு, ராஜ் டிவி சார்பில் சென்னையில் பாராட்டுவிழா நடந்தது. அத்தோடு உழைப்பால் உயர்ந்த மாமேதை என்ற விருதும் வழங்கப்பட்டது.

    நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இந் நிகழ்ச்சியில், பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,நாகேஷ், சிவக்குமார், விவேக் ஆகியோரும்

    நடிகைகள் மனோரமா, கீதா, சுமித்ரா, அம்பிகா, இயக்குனர்கள் பாரதிராஜா, பார்த்திபன், எஸ்.பி.முத்துராமன், வசந்த், சரண், ஹரி,தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், ஆர்.பி.செளத்ரி, எடிட்டர் மோகன், கவிஞர் வாலி, எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பூரண கும்ப மரியாதையுடன் விழா மேடைக்கு கே.பாலச்சந்தர் அழைத்து வரப்பட்டார்.

    கே.பிக்கு இரு பக்கமும் ரஜினியும் கமலும் அமர்ந்திருந்தனர். இருவரது கைகளையும் பிடித்தபடியே உணர்ச்சிப் பிரவாகமாய்அமர்ந்திருந்தார் கே.பி.

    நிகழ்ச்சியில் நடிகைகள் கிரண், மாளவிகா, ரம்பா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.

    பின்னர் கமல்ஹாசன் பேசுகையில்,

    இந்த நாள், ஜெமினி மாமாவிற்கும் நன்றி சொல்லும் நாள். வெள்ளிவிழா படப்பிடிப்பு அரங்கில் என்னை கே.பாலச்சந்தரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியது அவர்தான்.

    அறிமுகப்படுத்திய ஒரே வாரத்தில், பாலச்சந்தர் அவர்களுக்கு கடுமையான மாரடைப்பு. பிழைப்பது கடினம் என்று கூட சில பத்திரிக்கைகள்செய்தி வெளியிட்டன. நல்ல தமிழ் சினிமாவின் ரசிகன் என்ற முறையில் அவர் நலம் பெற வேண்டும் என்று நானும் சின்னதாக வேண்டிக்கொண்டேன்.

    அன்று எனக்குத் தெரியாது, என் வண்ணமிகு எதிர்காலத்தின் ஆதி ஜோதி ஆஸ்பத்திரியில் கிடக்கிறதென்று. தெரிந்திருந்தால், வாசலிலேயேதவமாய் கிடந்திருப்பேன்.

    அணையாமல் என் ஜோதி துளிர்த்தெழுந்து பிரகாசித்து எனக்கு விடியல் வந்து விட்ட சேதியை வீடு தேடி ஆள் மூலம் அனுப்பி வைத்தது.மறைந்த நண்பர் ராமுடு எனும் ராமு, பாலச்சந்தர் என்னை பார்க்க விரும்புகிறார் என்ற சேதியுடன் வந்தார்.

    அங்கு துவங்கிய உறவு, இந்த மேடையில் என்னை அவரின் மூத்த பிள்ளையாக நிறுத்தியிருக்கிறது. தமிழ் திரையலகின் இரண்டு இல்லங்கள்என்னை அவர்களது மூத்த மகனாக தத்தெடுத்திருக்கிறது. ஒன்று அன்னை இல்லம், இன்னொரு கே.பாலச்சந்தரின் இல்லம், அதுஅப்பனில்லம்.

    திரையுலகில் நான் எனது பெயருக்கு முன் போட்டுக் கொள்ளும் இனிஷியல் இந்த அப்பாவின் இல்லத்திலிருந்து வந்ததுதான்.

    நான் தைரியம் பழகியது, ரெளத்திரம் பழகியது, தொழில் ஒழுக்கம், நேர்மை பழகியது எல்லாம் அவரது நிழலில். சிவாஜி என்னும்துரோனருக்கு நான் ஏகலைவன் என்றால் கே.பாலச்சந்தர் என்ற துரோணருக்கு நான் அர்ஜூனன்.

    பாலச்சந்தர் அய்யா அதிகம் கோபப்படுவார். ஆனால் அவரது கோபம் எல்லாம் மருந்து மாதிரி. மருந்து புண்ணில் போடும்போது எரியும்,ஆனால் புண்ணை ஆற்றி விடும். பின்னர் காற்றோடு கலந்து விடும். அப்படித்தான் எனது பல காயங்கள் மாயமாகியுள்ளன.

    அரசாங்க ஊழியராக அவர் இருந்த நாட்கள், தமிழ் சினிமாவுக்கு இழப்பு, அவர் இங்கு முழுவதுமாக வர தீர்மானித்த நாள் தமிழ்சினிமாவின் பொன் நாள்.

    அவருக்கு ரோட்டரி சங்கமும், ராஜ் டிவியும் பாராட்டு விழா நடத்தியிருக்கின்றன. அதற்கு நன்றி. அவர்கள் முந்திக் கொண்டு விட்டார்கள்.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய 61 முகங்களில் ஏதாவது சில முகங்கள் சேர்ந்து இந்த விழாவை நடத்தியிருக்க வேண்டும்.

    பரவாயில்லை, எங்களுக்கும் விழா எடுக்க பாலச்சந்தர் அய்யா வாய்ப்பளிப்பார் என்று நம்புகிறோம் என்றார் கமல்.

    ரஜினி பேசுகையில், கொஞ்சம் திறமை இருந்தாலே போதும். நீங்கள் கே.பாலசந்தரை சந்தித்து, அவர் மனசு வைத்தார், நீங்கள் இந்தஅரங்கில் முன் வரிசையில் உட்கார முடியும். அது தான் கே.பியின் மாஜிக் டச்.

    ஒரு விழாவில் கவிஞர் வாலி சொன்னார். நான் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன் சோற்றுக்கு அலைந்தேன். அவரை சந்தித்த பிறகுசோறு சாப்பிட நேரமில்லை என்று. அதே மாதிரி தான் நானும். வாழ்க்கைய பார்த்து பயந்தவன் இந்த சிவாஜி ராவ். என் பெயரை ரஜினிஎன்று கே.பி. சார் மாத்தின பிறகு வாழ்க்கை என்னைப் பார்த்து பயந்தது.

    இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன், கொடிய விலங்குகள் உலவும் காட்டில் வசித்து வந்த ஒரு மகானைப் பார்த்துக்கேட்டார். எப்படி கொடிய விலங்குகளுடன் நீங்கள் இங்கு வாழ முடிகிறது என்று.

    3 ஒழுக்கங்கள்தான் அதற்கு காரணம் என்று மகான் பதிலளித்தார். என்ன அந்த ஒழுக்கங்கள் என்று ராதாகிருஷ்ணன் கேட்டார். அதற்கு அந்தமகான், உடல் ஒழுக்கம், அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் மற்றும் நாட்டுக்கும் செய்ய வேண்டிய கடமை, எந்த மதத்தில் பிறந்தாயோஅந்த மதத்தில் சடங்குகளை முறையாக செய்ய வேண்டியது ஆகியவைதான் அவை என்றார் அந்த மகான்.

    பாலச்சந்தர், நாடகம் என்ற தாய் வீட்டை விட்டு சினிமா என்ற மாமியார் வீட்டுக்குப் போய் விட்டார். அவர் மீண்டும் தாய் வீட்டுக்குத்திரும்ப வேண்டும். அதற்காக மாமியார் வீட்டை மறந்து விடுமாறு நான் கூறவில்லை.

    அவர் மீண்டும் நாடக சபா ஒன்றைத் தொடங்க வேண்டும். நாடகங்கள் தயாரிக்க வேண்டும். அதில் நானும் நடிக்கத் தயாராக உள்ளேன்.கமல்சாரும் நடிப்பார் என்று நம்புகிறேன். இன்னும் சிலரும் கூட நடிக்க வரலாம். அதன் மூலம் நாடகத்துக்கு புதுவாழ்வு கிடைக்கும் என்றார்ரஜினி. எனவே இதுகுறித்து அவர் ஆலோசிக்க வேண்டும்.

    நிகழ்ச்சியில் பாலச்சந்தருக்கு கமலும், ரஜினியும் சேர்ந்து ராஜ் டிவி விருதை வழங்கினார்கள். பாலசந்தர் குறித்த ஒரு குறும்படமும்திரையிடப்பட்டது.

    விழா நடந்து கொண்டிருந்தபோது, வண்ணக் காகிதங்களை உமிழும் பேப்பர் பாம் வெடித்ததில் மேடையில் தீப் பிடித்துக் கொண்டது.மேடையில் கே.பி., ரஜினி, கமல் ஆகியோர் ஏறியபோது இந்த பேப்பர் பாம்கள் உடைக்கப்பட்டன.

    அப்போது வண்ணக் காகிதங்கள் மேலிருந்து பொழிந்தன. இதில் சில காகிதங்கள் விளக்குகளில் பட்டு தீப் பிடித்துக் கொண்டன. மேடையில்தீ பிடித்தததால் பரபரப்பு ஏற்பட்டுவிட, காவலர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    Read more about: balachandar kamal praise rajini
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X