»   »  சிறந்த நடிகர் துல்கர் சல்மான்; சிறந்த நடிகை பார்வதி.. கேரள அரசு விருதுகள் அறிவிப்பு

சிறந்த நடிகர் துல்கர் சல்மான்; சிறந்த நடிகை பார்வதி.. கேரள அரசு விருதுகள் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகராக துல்கர் சல்மானும் (சார்லி), சிறந்த நடிகையாக பார்வதியும் (என்னு நிண்டே மொய்தீன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

Ennu ninte moideen parvathy

சார்லி படத்தின் இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

charlie dulquer salmaan

சிறந்த படமாக சணல்குமார் சசிதரன் இயக்கிய ஒளிவு திவசத்தே களி தேர்வாகியுள்ளது. சிறந்த மலையாள படத்துக்கான இன்னொரு விருது, ‘அமீபா' படத்துக்கு வழங்கப்படுகிறது.

Ozhivu Divasathe Kali

சிறந்த இசையமைப்பாளர் விருது ரமேஷ் நாராயணுக்குக் கிடைத்துள்ளது.

சார்லி, நிண்டே மொய்தீன் ஆகிய படங்கள் அதிக விருதுகளைப் பெற்றுள்ளன.

சிறந்த நடுவர் விருதுக்கு நடிகர் ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இசை அமைப்பாளராக ரமேஷ் நாராயணன் (இடவபாதி, என்னு நின்டே மொய்தீன்), பாடகராக பி.ஜெயச்சந்திரன் (என்னு நின்டே மொய்தீன், ஜிலேபி), பாடகியாக மது நாராயணன் (இடவபாதி), ஒளிப்பதிவாளராக ஜோமோன் டி ஜான் (சார்லி, என்னு நின்டே மொய்தீன்), பாடலாசிரியராக ரபீக் அஹமத் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த குணச்சித்ர நடிகராக ‘நிர்நாயகம்' படத்தில் நடித்த பிரேம் பிரகாசும், சிறந்த குணசித்ர நடிகையாக ‘பெண்' படத்தில் நடித்த அஞ்சலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

English summary
Dulquer Salman and Parvathy have adjudged as the best actors by the govt of Kerala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil