twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரள மாநில சினிமா விருதுகள் 2020 அறிவிப்பு... சிறந்த படமாக கிரேட் இந்தியன் கிட்சன் தேர்வு

    |

    கொச்சி : கேரளாவின் சினிமா விருதுகள் 2020 தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சிறந்த படமாக தி கிரேட் இந்தியன் கிட்சன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு மாற்றமும் ஏற்படாது ஆண்டவரே.. யார அனுப்புவீங்கன்னு தெரியும்.. புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!ஒரு மாற்றமும் ஏற்படாது ஆண்டவரே.. யார அனுப்புவீங்கன்னு தெரியும்.. புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

    மேலும் ஜெயசூர்யா மற்றும் அன்னா பென் ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகளை பெற்றுள்ளனர்.

    கேரள சினிமா விருதுகள் 2020

    கேரள சினிமா விருதுகள் 2020

    கடந்த ஆண்டிற்கான கேரள மாநில சினிமா விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி கிரேட் இந்தியன் கிட்சன் படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்தப் படம் பெண்களின் குடும்பச் சூழலை மையமாக கொண்டு வெளிவந்து சிறப்பான விமர்சனங்களை பெற்ற படம். ஜியோ பேபி படத்தை இயக்கியிருந்தார். பல்வேறு சர்வதேச விருதுகளையும் இந்தப் படம் வென்றுள்ளது.

    சிறந்த பிரபல படம் -ஐயப்பனும் கோஷியும்

    இதேபோல சிறந்த பிரபலமான படத்திற்கான விருதை சச்சி இயக்கிய ஐயப்பனும் கோஷியும் என்ற படம் வென்றுள்ளது. ப்ரித்விராஜ் பிஜு மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளிவந்த படம் இது. மூத்த நடிகை சுஹாசினி தலைமையிலான நடுவர் குழு விருது வென்றவர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

    சிறந்த நடிகர் -ஜெயசூர்யா

    சிறந்த நடிகர் -ஜெயசூர்யா

    இதேபோல சிறந்த நடிகருக்கான விருதை வெல்லம் படத்திற்காக ஜெயசூர்யாவும் கப்பெல்லா படத்திற்காக அன்னா பென் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளனர். இதே போல சிறந்த இயக்குநருக்கான கேரள அரசின் விருதை என்னிவர் படத்திற்காக சித்தார்த் சிவாவும் பெற்றுள்ளனர்.

    அறிமுக இயக்குநர் -முஸ்தபா

    அறிமுக இயக்குநர் -முஸ்தபா

    இதேபோல சிறந்த இரண்டாவது திரைப்படத்திற்கான விருதை சென்னா ஹெக்டே இயக்கிய திங்கலச்ச நிச்சயம் படம் வென்றுள்ளது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை கப்பேலா படத்திற்காக முஸ்தபா பெற்றுள்ளார். சிறந்த ஆண் குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை காசிமினிட் காதல் படத்தில் நடித்த நிரஞ்சனும் பியாலி படத்தில் நடித்த ஆரவ்ய வர்மா சிறந்த பெண் குழந்தைக்கான விருதையும் பெற்றுள்ளனர்.

    அமைச்சர் அறிவிப்பு

    அமைச்சர் அறிவிப்பு

    திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சஜி செரியன் இந்த விருதுகளை அறிவித்துள்ளார். இதில் சுஹாசினி மணிரத்னம், கேரள சாலசித்ரா அகாடமி தலைவர் மற்றும் நடுவர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நிவின் பாலி வாழ்த்து

    நிவின் பாலி வாழ்த்து

    இதனிடையே விருது பெற்றவர்களுக்கு நடிகர் நிவின் பாலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்களும் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    Kerala state film awards 2020 announced
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X